மூடு

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம்

திட்டம்

ஒரு நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படை அந்த நாட்டின் மனிதவள மேம்பாடு, அந்த மனிதவள மேம்பாட்டின் அடித்தளமாக, ஆணிவேராக இருப்பவர்கள் பெண்களும், குழந்தைகளும் தான் ஆகவே தான் பெண்களின் நலனையும்  உயர்வையும் கருத்தில் கொண்டு  1975 –ம் ஆண்டு அக்டோபர்  2-ம் நாள் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. முதன் முதலில் தர்மபுரி மாவட்டம் தளி (மலை வாழ் பகுதி), மதுரை மாவட்டம் நிலக்கோட்டை கிராமப்புற திட்டம் மற்றும் சென்னை நகர்ப்புற திட்டம் ஆகிய மூன்று  மாவட்டங்களில்  ஆரம்பிக்கப்பட்டது

கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில்  400  முதல்  800 வரை மக்கள் தொகையும்,  மலைப்பகுதிகளுக்கு  300 முதல்  800  வரை மக்கள் தொகையும் கொண்ட  பகுதிக்கு 1  முதன்மை அங்கன்வாடி மையம்,  குறு மையங்களுக்கு 150 முதல் 300 வரை  மக்கள் தொகையும் இருக்க வேண்டும்  என்பது மத்திய அரசு நிர்ணயித்த  வழிகாட்டுதல்   விதியாகும்

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6 குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது இவற்றில்  844 முதன்மை அங்கன்வாடி மையங்களும்  96  குறு அங்கன்வாடி மையங்களும் ஆக  மொத்தம் 940 அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது

நோக்கம்

  1. 6 மாதம் முதல்  60 மாதம் வரையிலான குழந்தைகளின் ஊட்டச்சத்து  மற்றும் சுகாதார  நிலையை  மேம்படுத்துதல்
  2. 3 வயதுக்குட்பட்ட  குழந்தைகளின் ஊட்டச்சத்து   குறைபாட்டை  தவிர்த்தல்
  3. முன்பருவக் கல்வி மூலம் முழு வளர்ச்சி அடைய தூண்டுதல் செயல்களை அளித்தல்
  4. குழந்தைகள் இறப்பு விகிதம் மற்றும் கர்ப்பிணிகள் இறப்பு விகிதத்தை தடுத்தல்
  5. பெண்களுக்கும், வளர் இளம் பெண்களுக்கும் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்த சுகாதார  கல்வி  அளித்தல்

பயனாளிகள்

  1. 6 மாதம் முதல்  60  மாத குழந்தைகள்
  2. கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள்
  3. வளர் இளம் பெண்கள்

திட்டப்பணிகள்

  1. இணை உணவு வழங்குதல்
  2. முறைசாரா முன்பருவ கல்வி நடத்துதல்
  3. சத்துணவு மற்றும்  சுகாதாரக்  கல்வி  அளித்தல்
  4. தடுப்பூசி வழங்கல்
  5. வளர்ச்சி கண்காணித்தல்
  6. மருத்துவ பரிந்துரை

தேசிய   ஊட்டச்சத்து   குழுமம்  (POSHAAN Abhiyaan)

2017 2018 –ம் ஆண்டிலிருந்து அடுத்த மூன்று ஆண்டிற்குள் இந்தியாவில்  6 வயதிற்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் ஊட்டச்சத்து நிலையை முன்னேற்றுவதற்கான குறிக்கோளுடன் ஊட்டச்சத்து  ஒருங்கிணைப்பு திட்டம்  ஒன்றை  மத்திய   அரசு   ஏற்படுத்தியுள்ளது

தமிழகத்தில் இத்திட்டம் முதற்கட்டமாக 5 மாவட்டங்களிலும் இரண்டாம் கட்டமாக  6  மாவட்டங்களிலும் மூன்றாம் கட்டமாக காஞ்சிபுரம் உட்பட  21 மாவட்டங்களில் செயல்பட்டு  வருகிறது

இத்திட்டத்தின்கீழ் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், பிறந்த குழந்தைகள், 6 வயதுக்குட்பட்ட  குழந்தைகளின் எடை மற்றும் உயரம் கண்டறிந்து குழந்தைகளிடையே காணப்படும் குள்ளதன்மை, உடல் மெலிவு, எடை குறைவு ஆகியவற்றை குறைத்திட வளர்ச்சி கண்காணிப்பு சாதனம் ( Growth monitoring  device)  வழங்கப்பட்டுள்ளது

  • 0-6 வயது குழந்தைகளிடையே  குள்ள தன்மையை ஒவ்வொரு ஆண்டும் 2 சதவிகிதம்   வீதம்  6  சதவிகிதம்  குறைத்தல்
  • 0-6 வயது குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு (எடை குறைவு) ஒவ்வொரு ஆண்டும்  2 சதவிகிதம்  வீதம் 6  சதவிகிதம் குறைத்தல்
  • 6 – 60 மாதங்கள் இளங்குழந்தைகளிடையே இரத்த சோகை தாக்கத்தினை ஒவ்வொரு ஆண்டும்  3 சதவிகிதம் வீதம் 9   சதவிகிதம் குறைத்தல்
  • 15 முதல்  49 வயதுள்ள வளர் இளம் பெண்கள் மற்றும் தாய்மார்களிடையே இரத்தசோகை  தாக்கத்தினை  ஒவ்வொரு  ஆண்டும் 3 சதவிகிதம் வீதம் 9  சதவிகிதம்  குறைத்தல்
  • குறைந்த பிறப்பு எடையை ஒவ்வொரு ஆண்டும் 2 சதவிகிதம் வீதம் 6 சதவிகிதம்  குறைத்தல்

 

அலுவலக  விவரம்:
மாவட்ட திட்ட அலுவலகம்
ஒருங்கிணைந்த  குழந்தை   வளர்ச்சித்   திட்டம்
பழைய ஊரக வளர்ச்சி முகமை கட்டிடம் 2வது தளம்,
மாவட்ட  ஆட்சியர்  அலுவலக  வளாகம்,
காஞ்சிபுரம் 631501
அலுவலக தொலைபேசி எண்:- 044-27237618
அலுவலக  மின்னஞ்சல் முகவரி:- d604kpm@gmail.com

தகவல்  அறியும்  உரிமைச்சட்டம்
பொது தகவல்    அலுவலர்
கண்கானிப்பாளர்,
மாவட்ட திட்ட அலுவலகம்,
ஒருங்கிணைந்த  குழந்தை   வளர்ச்சித்   திட்டம்,
பழைய ஊரக வளர்ச்சி முகமை கட்டிடம் 2வது தளம்,
மாவட்ட  ஆட்சியர்  அலுவலக  வளாகம்,
காஞ்சிபுரம் 631 501.
மேல்முறையீட்டு அலுவலர்
மாவட்ட திட்ட அலுவலர்
மாவட்ட திட்ட அலுவலகம்,
ஒருங்கிணைந்த  குழந்தை   வளர்ச்சித்   திட்டம்,
பழைய ஊரக வளர்ச்சி முகமை கட்டிடம் 2வது தளம்,
மாவட்ட  ஆட்சியர்  அலுவலக  வளாகம்,
காஞ்சிபுரம் 631 501