மூடு

வேலைவாய்ப்பு அலுவலகம்

வேலைவாய்ப்பு அலுவலக பணிகள்

          வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலையில்லாத நபர்களின் விவரங்கள் பதிவு செய்து, அவ்வப்போது பெறப்படும் அரசு பணிக்காலியிடங்களுக்கு பதிவுமூப்பு அடிப்படையில் பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றது.  காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் உயிர்ப்பதிவேட்டில் 2,72,352 நபர்கள் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

வேலையில்லாத திண்டாட்டத்தை குறைக்கும் நடவடிக்கைகள்

  1. தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பும், போட்டித் தேர்வுகளுக்குண்டான புத்தகங்கள் மற்றும் மாதந்திர சஞ்சிகைகள் கொண்ட நூலக வசதியும் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அரசாணை (நிலை) எண்.106, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (ஆர்2)த்துறை நாள்:20.07.1999 என்ற அரசாணையின்படி நடத்தப்பட்டு வருகிறது.நூலகத்தில் சுமார் 3000 புத்தகங்களும், ஒரே நேரத்தில் சுமார் 50 நபர்கள் அமர்ந்து படிக்கும் வசதியும் கொண்டுள்ளது.சிறந்த நிபுணர்களைக் கொண்டு போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.  சுமார் 100 மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து பயிலும்வசதி உள்ளது.
  2. தனியார் வேலைவாய்ப்பு முகாம்:தமிழ்நாடு அரசின் அறிவுரைப்படி, அவ்வப்போது தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தி தனியார் துறையில் வேலைநாடுநர்களை பணியமர்த்தம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.  இதற்காக அரசு ஒரு காலாண்டுக்கு ஒரு இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

வேலைவாய்ப்பு அலுவலகம் தொடர்பான சில முக்கிய இணையதளங்கள்

  1. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய – https://tnvelaivaaippu.gov.in/
  2. தனியார்த்துறையில் வேலைவாய்ப்பினை பெற – https://www.tnprivatejobs.tn.gov.in/
  3. திறன்பயிற்சிக்காக பதிவு செய்ய – https://www.tnskill.tn.gov.in/
  4. அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்ய – https://www.omcmanpower.com/