மூடு

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

மாவட்ட நிர்வாகம் மாவட்ட ஆட்சித் தலைவரின் கீழ் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் தனது அதிகார எல்லைக்குள் ஏறப்டும் சட்டம் ஒழுங்கை பராமரித்தல் மாவட்ட அபிவிருத்தி, பொது தேர்தல்கள் மற்றும் ஆயுத உரிமம் போன்ற பணிகளை மேற்கொள்கிறார்.

மாவட்ட நிர்வாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முக்கிய சிவில் பொருட்கள், நிலம் சம்மந்தப்பட்ட பணிகள், சுரங்கங்கள் மற்றும் தாதுக்கள் கிராம நிர்வாக அலுவலர் சம்மந்தப்பட்ட பணிகளை மேற்கொள்கிறார்.

மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தன்னுடைய பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் மேற்பார்வையின் கீழ் மேற்கொண்டு வருகிறார். மேலும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முழுவதையும் மேற்பார்வையிடும் பணியினை மேற்கொள்கிறார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரின் திட்டப் பணிகளை மேற்கொள்வதற்காக திட்ட அலுவலர், ஊரக வளர்ச்சி முகமை காஞ்சிபுரம் அவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இவரின் கீழ் உதவி இயக்குநர் டவுன் பஞ்சாயத்துகள், மாநகராட்சி கமிஉனர் மற்றும் முனிசிபல் ஆணையர் ஆகியோரின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.


மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் பல்வேறு பிரிவுகள்

  1. அ-பிரிவு – அனைத்து நிலை அலுவலர்கள் பணியமைப்பு
  2. ஆ-பிரிவு – நில மாற்றம்
  3. டி-பிரிவு -ஆவணங்கள்
  4. இ-பிரிவு – தேர்தல்
  5. எப்-பிரிவு -நிலம் கையகப்படுத்துதல்
  6. ஜெ-பிரிவு – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம்
  7. எம்-பிரிவு – சட்டம் ஒழுங்கு
  8. என்-பிரிவு – நில மாற்றம் / பட்டா முரண்பாடு களைதல்
  9. க்யூ-பிரிவு – கனிம வளம்
  10. ஆர்-பிரிவு – ஓய்வூதியம் மற்றும் வீட்டு கடன்
  11. பிரிவு எஸ்-பொது விநியோக அமைப்பு, குடிமைப் பொருள்கள்
  12. ட்டி-பிரிவு – பணியாளர் ஊதியம்
  13. யு-பிரிவு – அரசு தேர்வுகள் நடத்துதல்
  14. வி-பிரிவு கலால் மற்றும் ஆயத்தீர்வை
  15. டபிள்யூ – பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன்
  16. எக்ஸ் – சமூக பாதுகாப்புத் திட்டங்கள் / அனைத்து மனு நீதி மனுக்கள்
  17. ஒய் – பிரிவு – முக்கிய பிரமுகர்கள் வருகை
  18. நி.சீ – பிரிவு – நில சீர்திருத்தம் சம்மந்தப்பட்ட கோப்புகள்
  19. டி.எம் – பிரிவு – இயற்கை இடற்பாடுகள்
  20. டி(பி) – பஞ்சாயத்து
  21. வி – பிரிவு – கலால் மற்றும் ஆயத்தீர்வை
  22. துணை கலெக்டர் -மக்கள் தொடர்பு, ஜமாபந்தி,நாமக்கு நாமே திட்டம்,
  23. உதவி இயக்குநர் (பஞ்சாயத்து) – பஞ்சாயத்து நடைமுறைகள்
  24. கூடுதல் இயக்குனர்(தணிக்கை):: ஆடிட் மற்றும் ஹை லெவல் கமிட்டி
  25. நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) – சிறுசேமிப்பு
  26. நேர்முக உதவியாளர் (சத்துணவு) – பள்ளிகளில் சத்துணவு வழங்குதல்
  27. திட்ட அலுவலர் – ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து
  28. உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) – போரூராட்சிகள் நடைமுறைகள்
  29. உதவி இயக்குநர் (நில அளவை) – நில அளவை மற்றும் பதிவேடுகள்