மூடு

தாட்கோ-காஞ்சிபுரம்-திட்டம் ( SC )

தேதி : 05/08/2021 -

 

காஞ்சிபுரம் மாவட்டம்
அனைத்து துறைகளிலும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் (ஊரக / நகர்புற ஏழைகளுக்கு உதவிட)
துறையின் பெயர்: தாட்கோ (தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்)
மாவட்ட தலைமை அலுவலர் பெயர் மற்றும் கைப்பேசி எண். திருமதி.ச.மணிமேகலை, எம்.காம்,
மாவட்ட மேலாளர்
9445029462
வ. எண். திட்டத்தின் பெயர் தகுதி கடன் / மான்யம் / உதவிகள் குறிப்பு
1 2 3 4 5
1 நிலம் வாங்கும் திட்டம் விண்ணப்பதாரர் ஒரு ஆதிதிராவிட பெண்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் 18 -65 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் ஆண்டு குடும்ப வருமானம் ரூ.2.00 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் தொழில் விவசாயமாக இருக்க வேண்டும்.
இத்திட்டத்தின்கீழ் அதிகப்பட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை அல்லது 5 ஏக்கம் புஞ்சை நிலம் வாங்கலாம்
விண்ணப்பதாரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இதுவரை எந்த மானியத்தையும் பெறக்கூடாது.
திட்ட தொகையில் மான்யம் குறைந்தது 30 விழுக்காடு அல்லது அதிகப்பட்சமாக 2.25 இலட்சம் தாட்கோ முன்விடுவிப்பு மான்யம் ஆகும.
5 விழுக்காடு பயனாளி பங்குதொகை
65 விழுக்காடு வங்கி கடனுதவி
விண்ணப்பதாரர்கள் வாங்க வேண்டிய நிலத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆதிதிராவிடர் / பழங்குடியினத்தை அல்லாத பிற இனத்தைச் சேர்ந்த நில உரிமையாளர்களிடமிருந்து நிலங்களை வாங்க வேண்டும்.
வாங்கிய நிலம் விண்ணப்பதாரரின் பெயரில் மட்டுமே பதிவு செய்யப்படும்.
வாங்கிய நிலம் இருபது ஆண்டுகளுக்குள் விற்கப்படாது.
பெயரில் பதிவு செய்யப்பட்ட நிலத்தை வைத்திருக்கும் விண்ணப்பதாரர் மட்டும் நில மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
2 நிலம் மேம்பாட்டு திட்டம் விண்ணப்பதாரர் ஒரு ஆதிதிராவிடராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் 18 -65 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.  திறந்தவெளி கிணறு தோண்டுதல், ஆழ்துளை அமைத்தல் மற்றும் பம்ப் செட்களை மின்மயமாக்குதல் ஆகியவற்றின் நில மேம்பாட்டு நடவடிக்கைகள் நபார்ட் வழிகாட்டுதலின் படி மேற்கொள்ளப்படும்.
திறந்தவெளி கிணறு / ஆழ்துளை கிணறு தோண்டுவது தொடர்பாக புவியியலாளரிடமிருந்து சான்றிதழ் பெறப்படும்.
விண்ணப்பதாரர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கடந்த 5 ஆண்டுகளில் தங்கள் நிலங்களை மற்றவர்களுக்கு விற்று / மாற்றக்கூடாது.
திட்ட தொகையில் மான்யம் குறைந்தது 30 விழுக்காடு அல்லது அதிகப்பட்சமாக 2.25 இலட்சம் தாட்கோ முன்விடுவிப்பு மான்யம் ஆகும.
5 விழுக்காடு பயனாளி பங்குதொகை
65 விழுக்காடு வங்கி கடனுதவி
பயனாளிக்கு சொந்தமாக நிலம் இருக்க வேண்டும்,  போர்வெல், கிணறுகள் ஆழப்படுத்துதல் மற்றும் மின்சாரம் போன்ற நில மேம்பாட்டிற்கான கடன்களைப் பெறுவதற்கு அவர் தகுதியுடையவர், நிலங்கள் சீர்படுத்ததல் போன்ற பணிகள் இத்திட்டத்தின்கீழ் செயல்படுத்தலாம்
3 தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் (சிறப்பு திட்டம்) விண்ணப்பதாரர் மாவட்டத்தில் வசிக்க வேண்டும்
விண்ணப்பதாரர் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் எண்ணெய் நிறுவனங்களால் பரிந்துரைக்கப்பட்ட தகுதியில் ஏஜென்சி உரிமம் பெற்றிருக்க வேண்டும்
திட்ட தொகையில் மான்யம் குறைந்தது 30 விழுக்காடு அல்லது அதிகப்பட்சமாக 2.25 இலட்சம் தாட்கோ முன்விடுவிப்பு மான்யம் ஆகும.
5 விழுக்காடு பயனாளி பங்குதொகை
65 விழுக்காடு வங்கி கடனுதவி
தொழில்மயமாக்கல் செயல்பாட்டில் ஆதி திராவிடர்களின் சமமான பங்களிப்பை உறுதி செய்வதற்காக, பெட்ரோல் / டீசல் விற்பனை நிலையங்களை அமைப்பதற்காக இந்த சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
4 தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் தகுதி
விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் ஆண்டு குடும்ப வருமானம் ரூ .2.00 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் 18 -65 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் விண்ணப்பித்த தொழிலில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் இதுவரை எந்த மானியத்தையும் பெறக்கூடாது.
நிபந்தனைகள்
• விண்ணப்பதாரர்கள் செய்யவுள்ள தொழிலை தேர்ந்தெடுக்கலாம்.
இததிட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சொத்துக்கள் விண்ணப்பதாரரின் பெயரில் மட்டுமே பதிவு செய்யப்படும்.
விண்ணப்பதாரர் மானியம் அனுமதிக்கப்பட்ட மாவட்டத்தில் வணிகத்தை மேற்கொள்ள வேண்டும்.
திட்ட தொகையில் மான்யம் குறைந்தது 30 விழுக்காடு அல்லது அதிகப்பட்சமாக 2.25 இலட்சம் தாட்கோ முன்விடுவிப்பு மான்யம் ஆகும.
5 விழுக்காடு பயனாளி பங்குதொகை
65 விழுக்காடு வங்கி கடனுதவி
தனிநபர் கடனுதவி திட்டத்தின்கீழ் கடைகளை நிறுவுதல், லாரிகள், டிராக்டர்கள், பவர் டில்லர்கள், சுற்றுலா கார்கள், மினி-லாரிகள், ஆட்டோ ரிக்‌ஷாக்கள், மினி-டெய்ரி, பவர் லாண்டரி, டைலரிங் மற்றும் சாப்பல் தயாரித்தல் போன்றவை,
5 இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம் தகுதி
விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் ஆண்டு குடும்ப வருமானம் ரூ.2.00 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் 18 -45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் விண்ணப்பித்த தொழிலில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் இதுவரை எந்த மானியத்தையும் பெறக்கூடாது.
நிபந்தனைகள்
• விண்ணப்பதாரர்கள் செய்யவுள்ள தொழிலை தாங்களே தேர்ந்தெடுக்கலாம்.
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் வழங்கப்பட்ட தகுதிச் சான்றிதழை விண்ணப்பதாரர் வைத்திருக்க வேண்டும்.
இததிட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சொத்துக்கள் விண்ணப்பதாரரின் பெயரில் மட்டுமே பதிவு செய்யப்படும்.
விண்ணப்பதாரர் மானியம் அனுமதிக்கப்பட்ட மாவட்டத்தில் வணிகத்தை மேற்கொள்ள வேண்டும்.
திட்ட தொகையில் மான்யம் குறைந்தது 30 விழுக்காடு அல்லது அதிகப்பட்சமாக 2.25 இலட்சம் தாட்கோ முன்விடுவிப்பு மான்யம் ஆகும.
5 விழுக்காடு பயனாளி பங்குதொகை
65 விழுக்காடு வங்கி கடனுதவி
இத்திட்டம் படித்த இளைஞர்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டமாகும். இத்திட்டத்தின்கீழ் கடைகளை நிறுவுதல், லாரிகள், டிராக்டர்கள், பவர் டில்லர்கள், சுற்றுலா கார்கள், மினி-லாரிகள், ஆட்டோ ரிக்‌ஷாக்கள், மினி-டெய்ரி, பவர் லாண்டரி, டைலரிங் மற்றும் சாப்பல் தயாரித்தல் போன்றவை,
6 இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம் (கிளினிக் அமைத்தல்) தகுதி
கிளினிக் நிறுவ, விண்ணப்பதாரர் MBBS / BSMS / BDS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் தாட்கோ திட்டங்களின் கீழ் எந்த மானியத்தையும் பெறக்கூடாது
விண்ணப்பதாரர் தனது பெயரை இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ய வேண்டும்.
விண்ணப்பதாரரின் ஆண்டு குடும்ப வருமானம் ரூ.3.00 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் 18 -45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
திட்ட தொகையில் மான்யம் குறைந்தது 30 விழுக்காடு அல்லது அதிகப்பட்சமாக 2.25 இலட்சம் தாட்கோ முன்விடுவிப்பு மான்யம் ஆகும.
5 விழுக்காடு பயனாளி பங்குதொகை
65 விழுக்காடு வங்கி கடனுதவி
ஒரு கிளினிக் சொந்தமாக அமைக்க இளம் மருத்துவர்களுக்கு நிதி உதவி
கிராமப்புற / அரை நகர்ப்புறங்களில் மருத்துவ வசதிகளை அதிகரித்தல்
7 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி திட்டம் ஆதிதிராவிட மகளிர் குழுவாக இருத்தல் வேண்டும். ஒவ்வொரு குழுவும் 12 முதல் 20 மெமபர்களைக் கொண்டுள்ளது.
குழு உறுப்பினர்களின் வயது 18 முதல் 65 வரை இருக்க வேண்டும். குழு உறுப்பினர்களின் ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஆறு மாதங்கள் உருவான பிறகு, குழு இரண்டாவது மதிப்பீட்டிற்குப் பிறகு முறையே சுழலும் நிதி மற்றும் பொருளாதார உதவிக்கான கடன் ஆகியவற்றைப் பெறலாம்.
திட்ட தொகையில் மான்யம் குறைந்தது 50 விழுக்காடு அல்லது அதிகப்பட்சமாக 2.50 இலட்சம் தாட்கோ முன்விடுவிப்பு மான்யமாகும். மீதம் 50 விழுக்காடு வங்கி கடனுதவி. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளைத் தொடங்க பொருளாதார உதவி வழங்கப்படுகிறது.
8 இலவச துரித மின் இணைப்பு திட்டம் விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் எந்தவொரு அரசாங்க திட்டங்களிடமிருந்தும் எந்தவொரு மாதாந்திர உதவிகளையும் பெற்றிருக்கக்கூடாது.
விண்ணப்பதாரர் திறந்த கிணறு அல்லது ஆழ்துளை உள்ள நிலத்தின் உரிமையாளராக இருக்க வேண்டும்.
பட்டா விண்ணப்பதாரரின் பெயரில் இருக்க வேண்டும்
ஒரு நபருக்கு ரூ.75,000/- வைப்பு தொகையாக விடுவிக்கப்படுகின்றது. ஆதிதிராவிட பயனாளிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்குவதற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
9 மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதி திட்டம் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள், அசாதாரண கலைஞர், 30 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத பெண்கள் மற்றும் பெற்றோர் / பாதுகாவலர் இல்லாத குழந்தைகள். ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக ரூ.20,000 / – மானியமாக வழங்கப்படுகிறது. மாவட்ட ஆட்சித் தலைவரின் விருப்புரிமை நிதி திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள், அசாதாரண கலைஞர், 30 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத பெண்கள் மற்றும் பெற்றோர் / பாதுகாவலர் இல்லாத குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகின்றது.
10 திறன் பயிற்சி திட்டம் ஆதிதிராவிட மாணவ / மாணவியராக இருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 35 வரை உதவித் தொகையுடன் பயிற்சி ஆதிதிராவிட மாணவ / மாணவியர்களுக்கு உதவித்தொகையுடன் அரசு அங்கீகாரம் பெற்ற தொழில்துறை பள்ளி மூலம் பயிற்சி நிறுவனங்கள் மூலம் அழகுகலை, தையல் தொழில், கனரக வாகனம் ஓட்டுநர் பயிற்சி மற்றும் Tally, Hardware, Networking, BPO/ Call centre
Multimedia and Animation போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றது.

பயனாளி:

TAHDCO

பயன்கள்:

TAHDCO

விண்ணப்பிப்பது எப்படி?

TAHDCO