அம்மா உடற்பயிற்சி கூடம்
| துறை: கிராமப்புற வளர்ச்சி
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 111 ன்படி ஊரகப் பகுதியிலுள்ள மக்களின் நலனுக்காக உடற்பயிற்சி கூடங்கள், பூங்காக்கள், விளையாட்டு மன்றங்கள் மற்றும் கலாச்சார மையங்கள் போன்ற தேவையான வசதிகளை வழங்குதல் கிராம ஊராட்சியின் விருப்பக் கடமைகளில் ஒன்றாகும். அதனடிப்படையில், 2016-17 ஆம் நிதியாண்டில் ஊரக இளைஞர்களின் உடல் ஆரோக்கியத்தையும் மன வளத்தையும் மேம்படுத்த அம்மா உடற்பயிற்சி கூடம் ஒன்றுக்கு ரூ.10 இலட்சம் வீதம் ரூ.50 கோடி மதிப்பீட்டில், 1,161 சதுர அடி பரப்பளவில் 500 அம்மா உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கும் பணிகள் எடுக்கப்பட்டுள்ளன.
அம்மா உடற்பயிற்சி கூடத்தின் நன்மைகள்
- ஊரக பகுதி இளைஞர்கள் உடற்பயிற்சி செய்யவும், தங்களது உடலினை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது
- ஊரகபகுதி மக்களின் சுகாதார உணர்வினை அதிகரிக்கிறது
- இளைஞர்களின் மன உறுதியை மற்றும் ஒருமித்த உணர்வினை வளர்க்கிறது
- விளையாட்டு போட்டிகளுக்கு இளைஞர்களை தயார்படுத்துகிறது
- அம்மா உடற் பயிற்சி கூடம், அம்மா பூங்காவிற்குள் அமைக்கப்பட்டு கிராம ஊராட்சிகளால் பராமரிக்கப்படும்
பயனாளி:
கிராமப்புற பகுதி மக்கள்.
பயன்கள்:
கிராமப்புற பகுதி மக்களின் ஆரோக்கியம்