மூடு

காணத்தக்க இடங்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தின் சுற்றுலா இடங்கள்

கைலாசநாதர் கோயில்

கைலாசநாதர் கோயில்

கைலாசநாதர் கோயில்

மிகவும் சிறப்பு மிக்க புகழ் வாய்ந்த கைலாசநாதர் கோயில் காஞ்சிமாநகரில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள லிங்கம் 10 அடி உயரம் கொண்டு சிறப்புடன் திகழ்கிறது.
இக்கோயில் 7-ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் இரண்டாம் ராஜசிம்மவர்மன் அவர்களால் கட்டப்பட்ட கோயில் ஆகும். இக்கோயிலின் கோபுரத்தின் மீது அமைந்துள்ள விமானம் மிகவும் புகழ் பெற்றதாகும். இது பல்லவர்கால சிற்ப கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

கைலாசநாதர் கோயில் சிற்பம்

கைலாசநாதர் கோயில் சிற்பம்

இக்கோயில் முழுவதும் கருங்கற்கலால் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் மேற்புரம் அனைத்தும் மிகுந்த கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இக்கோயில் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையால் பராமரிக்கப்பட்டுவருகிறது. காலை 6.00 மணி முதல் 12.30 மணி வரையிலும் மாலை 4.00 மணி முதல் 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும். இக்கோயில் காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவிலும் 2.7 கி.மீ தொலைவில் காஞ்சிபுரம் ரயில் நிலையமும் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு தனியார் டாக்ஸி, ஆட்டோக்களும் இயங்குகின்றன. இக்கோயில் சென்னையலிருந்து 75 கி.மீ தொலைவில் உள்ளது.


காஞ்சி மடம்

காஞ்சி மடம்

காஞ்சி மடம்

மிகவும் புகழ் வாய்ந்தி காஞ்சி காமகோடி பீடம் சங்கரமடம் ஆகும். இம்மடம் ஆதிசங்கரரால் நிறுவப்பட்டு மூலமான்ய சர்வாஜன பீடம் என அழைக்கப்படுகிறது. இம்மடத்தின் 68-வது மடாதிபதியாக காஞ்சி மஹாசுவாமிகள் ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆவார். இத்திருச்சபை 100 ஆண்டுகள் பழமையானது ஆகும். இம்மடத்தின் 69 மற்றும் 70 வது மடாதிபதிகளாக முறையே ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், சங்கர விஜயேந்திர ஸ்வாமிகள் உள்ளனர்.


காமாட்சி அம்மன் ஆலயம்

காமாட்சி அம்மன்

இக்கோயில் 12 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டு காஞ்சி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. “க” என்பது கல்விக் கடவுள் சரஸ்வதி என்றும், “மா” என்பது செல்வத்தின் கடவுள் சரஸ்வதி தேவியாகவும் கருதப்படுகிறது. காமாட்சி அம்பாள் சரஸ்வதி தேவியையும், லட்சுமி தேவியையும் குறிப்புடப்படுவதால் காமாட்சி அம்பாள் இருகண்கள் என குறிப்பிடப்படுகிறது. இத்தலம் சக்தி தலம் ஆகும் இது “நாபிஸ்தான ஒட்டியானா பீடம்” என்று அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் தங்கக் கோபுரம் அமையப்பெற்று தெய்வத்தின் தெய்வமாக இக்கோயில் திகழ்கிறது.
காமாட்சி அம்மன் இக்கோயிலில் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறாள். காஞ்சிமாநகரில் அம்மனுக்கு என்று தனி சன்னிதியாக இக்கோயில் மட்டும் திகழ்வதாகவும் காஞ்சிமாநகரின் இதயமாக திகழ்வதாகவும் புராணம் கூறுகிறது.
தொலைபேசி எண். 91-44-27233433, 27221214


ஏகாம்பரநாதர் கோயில்

ஏகம்பரநாதர் கோயில்

இக்கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றாகும். இக்கோயில் கோபுரம் 57 மீட்டர் உயரத்தில் அமையப்பெற்றுள்ளது. இக்கோயிலின் இராஜகோபுரம் தென்னிந்தியாவின் மிக உயரமான கோபுரம் ஆகும். இக்கோயில் விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டது. விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட ஆயரம் கால் மண்டபம் மிகவும் புகழ் வாய்ந்ததாகும். ஆலயத்தின் சுற்றுச்சுவர்கள் 1008 சிவலிங்கங்களின் வரிசையுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இக்கோயில் காலை 6.00 மணி முதல் 12.30 மணி வரையிலும் பிற்பகல் 4.00 மணி முதல் 8.30 மணி வரையில் திறந்து இருக்கும். இக்கோயில் காஞ்சிபுரம் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது. மேலும் காஞ்சிபுரம் பஸ் நிலையத்திற்கு அருகாமையில் உள்ளது.
தொலைபேசி எண். 91-44-27222084


ஸ்ரீ வரதராஜ ஸ்வாமி திருக்கோயில்

வரதராஜ பெருமாள்

ஸ்ரீ வரதராஜர் கோயில் என பிரபலமாக அறியப்படும் ஸ்ரீதேவராஜ ஸ்வாமி திருக்கோயில் காஞ்சிமாநகரின் கிழக்கு மூலையில் அமைந்துள்ளது. இக்கோயில் வளாகம் 23 ஏக்கர் நிலப்பரப்பும் 19 கோபுரங்களும் 400 தூண் மண்டபங்களும் கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று ஆகும். 12 ஆழ்வார்கள் இக்கோயிலில் விஜயம் செய்து இறைவனின் புகழ் பாடியதாக கூறப்படுகிறது. மே மற்றும் ஜீன் மாதங்களில் இக்கோயிலின் முக்கிய திருவிழாக்கள் நடைபெறுகிறது. இக்கோயில் பல்வேறு காலங்களில் பல்வேறு மன்னர்களால் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் நூறு தூண்கள் கொண்ட மண்டபம் விஜயநகர மன்னர்களால் கட்டபட்டது. வெளிநாட்டு சுற்றுலா பயனிகளை ஈர்க்கும் வண்ணம் கலைநயத்துடன் இக்கோயில் அமையப்பெற்றுள்ளது. 1645 ஆம் ஆண்டு தில்லி ஆலாம் கெஹார் பாஷா என்பவரால் இக்கோயிலின் திருப்பணிகள் முழுமை பெற்றுள்ளது.


வைகுண்ட பெருமாள் கோயில்

வைகுண்ட பெருமாள்

8 ஆம் நூற்றாண்டில் நத்திவர்மன் என்ற பல்லவ மன்னனால் இக்கோயில் கட்டபப்டட்து. இக்கோயில் 108 திவ்விய தேசங்களில் ஒன்றாக உள்ளது. வைகுண்டநாதர் (பரமபதநாதர்) மற்றும் வைகுண்டவள்ளி (லட்சுமி) ஆகிய தெய்வங்கள் அமைந்துள்ளனர். இக்கோயில் தற்போது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இக்கோயில் மூன்று அடுக்குகளாக அமையப்பெற்றுள்ளது. முதல் அடுக்கில் மூலவர் வைகுண்ட பெருமாள் மேற்கு நோக்கி உட்கார்ந்த நிலையிலும், இரண்டாவது அடுக்கில் அருணாசல பெருமாள் தனது தலையை வடக்கு நோக்கி சாய்ந்த கோலத்திலும் மூன்றாவது அடுக்கில் பரமபதநாதர் நின்ற நிலையிலும் அமையப்பெற்றுள்ளது. இவ்வாறு உட்கார்ந்தநிலை, சாய்ந்த நிலை மற்றும் நின்ற நிலை என மூன்று நிலைகளில் மக்களுக்கு பரமபதநாதர் அருள்பாளிக்கிறார்.
இக்கோயில் குளம் ஐராமுத தீர்த்தம் எனவும், கோயில் விமானம் முகுந்த விமானம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதசி அன்று முக்கிய திருவிழா நடைபெறுகிறது. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து நடைபயண தூரத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் காலை 7.30 மணி முதல் 12.00 மணி வரையிலும் மாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரையிலும் திறந்து இருக்கும். இக்கோயிலின் தொலைபேசி எண். 91-44-27269773, 9443990773.


மசூதிகள்

காஞ்சிமாநகரில் இரண்டு முக்கிய மசூதிகள் அமைந்துள்ளன. இம்மசூதிகள் 300 ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடக நவாப்களால் கட்டப்பட்டுள்ளது. இம்மசூதிகள் ஜமா மஸ்ஜித் என அழைக்கப்படுகிறது. மசூதியின் உள்ளே 108 சிவலிங்கம் அமைக்கப்பட்டு மத ஒற்றுமைக்கு உதாரணமாக திகழ்கிறது. புகழ் பெற்ற வைகுண்ட பெருமாள் கோயிலுக்கு அருகில் ஒரு மசூதி அமைந்துள்ளது. வைகுண்ட பெருமாள் கோயிலுக்கும் மசூதிக்கும் ஒரே குளம் பொதுவாக அமையப்பெற்று மத நல்லினக்கத்திற்கு வழி வகுக்கிறது. மேலும் ஸ்ரீ வரதராஜ ஸ்வாமி திருக்கோயில் பிரம்மோற்வத் திருவிழாவில் முஸ்லீம்களும் இடம் பெறுவது சிறப்பாகும்.

 

சகுந்தலா ஜகந்நாதன் அருங்காட்சியகம் (நாட்டுப்புற கலைகள்)

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த முதுகலையான நாட்டுப்புற கலைகள் சர் சி.பி.ராமசாமி அய்யர் அவர்கள் வாழ்ந்த வீடு அருங்காட்சியகமாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பழங்காலப் பொருட்களான பாரம்பரிய ஓவியம், பழங்கால பாம் இலைகள், இசைக்கருவிகள், பூஜைப்பொருட்கள், விளக்குகள், கற்சிலைகள், பாரம்பரிய உடை அலங்காரம், அலங்கார விளக்குகள், பட்டு பருத்தி மற்றும் கைத்தறி உடைகள், நகை மற்றும் உள்நாட்டு புத்தகங்கள் ஆகியவை இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

 

உலகளந்த பெருமாள் கோயில்

உலகளந்த பெருமாள்

உலகளந்த பெருமாள் விஷ்ணு பகவானின் ஐந்தாவது அவதாரம் (வாமன அவதாரம்) ஆகும். பிரம்மாவின் பிரமாண்ட வடிவமாக அமைந்துள்ளது இப்பெருமாள் ஆகும். இக்கோயில் ஜெயங்கொண்ட சோழனால் கட்டப்பட்டதாகும்.
இக்கோயில் நான்கு திவ்விய தேசங்கள் கொண்டு அமைந்துள்ளது. 1. திரு ஓரகம், 2. திருநீரகம், 3. திருக்காரவனம் ஆகும். இது எங்கும் காண முடியாத தனித்துவம் வாய்ந்த அம்சம் ஆகும். ஒரே கோயிலில் நான்கு திவ்விய தேசங்களை அமைந்திருப்பது காஞ்சிமாநகருக்கு பெருமை சேர்ப்பதாகும்.

காஞ்சிபுரம் பஸ் நிலையத்திற்கு மிக அருகாமையில் இத்தலம் அமைந்துள்ளது. இக்கோயில் காலை 7.00 மணி முதல் 12.00 மணிவரையும் மாலை 4.00 மணி முதல் 8.00 மணி வரையில் திறந்திருக்கும். தொலைபேசி 91+ 94435597107, 9894388279, 9443903450, 9442553820, 9787414773


 

ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் கோயில்

ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் கோயில்

இங்கு விஷ்ணு பகவான் நான்கு கைகளுடனும் 8 ஆயுதங்களுடனும் தோற்றமளிக்கிறார். 108 திவ்விய தேசங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இக்கோயிலில் மங்களாசனமாக ஆழ்வார்கள் உள்ளார்கள். தொண்டை மண்டல சக்கரவர்த்திகளில் புகழ்பெற்ற வைரமோகன் என்பவரால் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.
இத்தலம் ஆதிகேசவ பெருமாள் 8 கைகளுடன் காட்சியளிக்கிறார். வலது பக்க கைகளில் சக்கரம், வாள், பூ, அம்பும் இடது பக்க கையில் சங்கு, வில், கேடயம் மற்றும் கதை போன்ற ஆயுதங்களுடன் காட்சியளிக்கிறார்.
ஒரு ஏக்கர் நில பரப்பில் ஒரு ஒற்றை பரிகாரத்துடக் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் வடக்கு நுழைவாயிலில் 3 வரிசை ராஜ கோபுரம் அமைந்துள்ளது. இக்கோயிலின் குளம் கஜேந்திர புஷ்கரணி என போற்றப்படுகிறது. பூவராகர், ஆண்டாள், பேயாழ்வார் மற்றும் ஹனுமன் ஆகியவர்களுக்கு தனித்தனி சன்னிதிகள் அமையப் பெற்றுள்ளது. இக்கோயில் காலை 7.00 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 4.00 மணி முதல் 8.00 மணி வரையில் திறந்திருக்கும். இக்கோயில் காஞ்சிபுரம் பஸ் நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. தெலைபேசி எண். 91 + 44-27225242.


சுந்தர வரத பெருமாள் கோயில், உத்திரமேரூர்

சுந்தர வரத பெருமாள் கோயில்

சென்னையிலிருந்து 85 கி.மீ. தூரத்தில் உள்ளது. இந்த ஆலயம் சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். வாஸ்து சாஸ்திர வல்லுனரான பரமேஸ்வரனின் உதவியுடன நந்தி வர்மரால் இக்கோயில் கட்டப்பட்டது. இக்கோயிலில் சோழர் மற்றும் விஜயநகர பேரரசர்கள் பற்றிய கல்வெட்டுகள் அமைந்துள்ளது. கிருஷ்ண யஜிர் வேத வைகேசன ஆகமணத்தின்படி இங்கு சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன. இங்கு காமாட்சி சமேதமாக ஸ்ரீ கைலாச நாதர் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இக்கோயில் உத்தராய சோழர் காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.விஷ்ணு பொதுவாக 3 வடிவங்களில் ஒன்று காணப்படுகிறார்,
நின்ற நிலை,உட்கார்ந்த நிலையில் அல்லது சாய்ந்த நிலையில்.இந்த 3 வடிவங்களில் மகா விஷ்ணுவின் தர்ஷனைக் கொண்டிருக்கும் சில கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.


குமரக்கோட்டம் முருகன் கோவில்

1

இக்கோவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் வடமேற்கு திசையில் 0.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மேலும் இக்கோவிலின் வடக்கு பகுதியில் சங்கர மடமும், தெற்கு பகுதியில் கச்சபேஸ்வரர் கோவிலும் அமைந்துள்ளது. இக்கோவிலில் வீற்றிருக்கும் முருக பெருமானை போற்றியே கந்தபுராணத்தை கச்சியப்ப சிவாச்சாரியார் அவர்கள் இயற்றினார். செவ்வாய் கிழமை மற்றும் கிருத்திகை தினங்களில் இக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. தீபாவளிக்கு அடுத்து வரும் கந்த சஷ்டி திருவிழாவும், வைகாசி விசாகமும் பிரசித்திப்பெற்ற விழாக்களாக இங்கு கொண்டாடப்படுகிறது.


வல்லக்கோட்டை முருகன் கோவில்
1

இக்கோவில் திரும்பெரும்புதுர், சிங்கப்பெருமாள் வழிச்சாலையில் அமைந்துள்ளது. இக்கோவில் அறுபடை வீடு கோவில்களுக்கு நிகராக கருதப்படுகின்றது. 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர் அவர்கள் இயற்றிய திருப்புகழ் நூலில் உள்ள 8 பாடல்கள் வல்லக்கோட்டை முருகனை போற்றி இயற்றப்பட்டதாகும். இக்கோவிலானது 1200 வருடங்களுக்கு முன்பு பகீரதர் என்னும் அரசரால் கட்டப்பட்டது என்று நம்பப்படுகிறது. இந்த கோவிலில் உள்ள முருகப்பெருமானை இழந்த செல்வங்களை மீட்டு தரும் கொடை ஆண்டவர் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள உயரமான முருகன் சிலை உள்ள கோவில்களுள் இக்கோவிலில் வீற்றிருக்கம் 7 அடி கொண்ட முருகன் சிலை முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆடி கிருத்திகை நாள், சஷ்டி நாள், பங்குனி உத்திர நாள் மற்றும் திருக்கார்த்திகை திருநாள் ஆகிய தினங்கள் முருகரை தரிசிப்பதற்கு உகந்த நாட்களாகும்.


வைகுந்த பெருமாள் கோவில், உத்திரமேரூர்
1

இந்த கோவிலானது காஞ்சிபுரத்திலிருந்து 22 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இக்கோவிலானது 7ஆம் நூற்றாண்டில் இரண்டாம் நந்திவர்ம பல்லவனால் கட்டப்பட்டது. அதன்பின்னர் இக்கோவிலானது சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர அரசர்கள், நாயக்கர்கள் ஆகியோர்களால் புனரமைக்கப்பட்டது. மேலும் சோழர்கள் ஆண்ட காலத்தில் வைக்கப்பட்ட கல்வெட்டுகள் இன்றளவும் இக்கோவிலில் காணப்படுவது மிகச்சிறப்பாகும். முதலாம் பராந்தக சோழன் ஆட்சிகாலத்தின் பண்டைய கால ஆட்சிமுறையான குடவோலை முறையினை பற்றி இக்கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இக்கோவிலானது இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.