மூடு

திரு.பா.பொன்னையா, இ.ஆ.ப.

மாவட்ட ஆட்சியர் புகைப்படம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாக நடுவர் திரு. பா. பொன்னையா, இ.ஆ.ப., அவர்கள் 2009-ஆம் ஆண்டிற்குரிய இந்திய ஆட்சிப் பணியைச் சேர்ந்தவர் ஆவார். இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டம் பெற்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 1994-ஆம் ஆண்டு தேர்வு பெற்று கோட்ட வளர்ச்சி அலுவலராக பரமக்குடி மற்றும் மதுரையில் பணியாற்றியுள்ளார். பின்னர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராக தேனி, மதுரை, திருச்சி, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கடமையுணர்வுடன் பணியாற்றியுள்ளார். பின்னர் ஊரக வளர்ச்சித் துறையில் கூடுதல் இயக்குநராக பணி உயர்வு பெற்று 2009-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார். மேலும், தண்டையார்பேட்டை சார் ஆட்சியராக 2016 ஜுலை முதல் 2017 மார்ச் வரை பணியாற்றியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாக நடுவராக 2017 மார்ச் 9ம் தேதி முதல் பணிபுரிந்து வருகிறார்.