• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை

தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும், தமிழ்நாட்டில் மதுவிலக்கு குற்றங்களுக்கு சிறைத்தண்டனை பெற்று விடுதலையாகி மனம் திருந்துபவர்களின் பொருளாதார மறுவாழ்வுக்காகவும், அவர்கள் மீண்டும் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடாமல் வேறு தொழில்களை மேற்கொள்ள உதவுவதற்காகவும் 2011-2012-ம் ஆண்டு முதல் ரூ.5.00 கோடி மானியமாக மறுவாழ்வு நிதி வழங்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மறுவாழ்வு நிதியுதவி வழங்குவதற்கு ஏதுவாக எவ்வளவு தொகை ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் என்ற விவரம் மற்றும் பயனாளிகளின் எண்ணிக்கையுடன் கூடிய பயனாளிகளின் பட்டியலை உரிய விசாரணைக்குப்பின் தேர்வு செய்து முன்மொழிவினை அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கோரப்படுகிறது.

மேற்படி பயனாளிகளை தேர்வு செய்வது குறித்து, மதுவிலக்கு அமல் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை கோரப்பட்டு, மேற்படி அலுவலரிடமிருந்து வரப்பெறும் பயனாளிகளின் பட்டியலை உரிய வட்டாட்சியர்களுக்கு அனுப்பி விசாரணை செய்து பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, வரப்பெறும் பட்டியலை சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் மூலமாக அனுப்பி வைக்கபட்டு நிதி ஒதுக்கீடு பெறப்படுகிறது.  மேற்படி வரப்பெறும் நிதியினை கால்நடை பராமரிப்புத்துறை அலுவலரின் வாயிலாக ஒரு குழு அமைக்கப்பட்டு, ஒரு கறவை மாடு ரூ.30,000/-விலையில் வெளிச்சந்தையில் பயனாளியின் ஒப்புதலுடன் வாங்கப்பட்டு இன்சூரன்ஸ் செய்யப்பட்டு மேற்படி பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

விதிமுறைள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும்பட்சத்தில் மயக்க மருந்துகளை சேமித்து மற்றும் உபயோகப்படுத்துவது குறித்து உரிமம் (NDRC) பெற வேண்டும்.  மேற்படி உரிமம் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்படவேண்டும்.  மேற்படி உரிமம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வழங்கப்பட்டு வருகிறது.

மேற்படி உரிமம் பெற மாவட்ட ஆட்சியர் அவரிடம் மனு செய்ய வேண்டும் மனுவுடன் உரிமம் தொகையாக அரசு நிர்ணயித்துள்ள ரூ.1180/-ஐ செலான் மூலம் செலுத்தப்பட வேண்டும்.  மேற்படி மனுவில், சேமித்து வைக்க உத்தேசித்துள்ள அறையின் அறை சார்ந்த கட்டடத்தின் கட்டட உறுதி தன்மை சான்று (A,B,C,D), தீயணைப்புத்துறையின் தடையின்மை சான்று மற்றும் பொது சுகாதாரதுறையிடம் சான்று ஆகியவை பெற்று மனுவுடன் இணைக்கப்பட வேண்டும்.  மேற்படி வரபெறும் மனுவினை கோட்ட கலால் அலுவலர் மற்றும் உதவி ஆணையர் (கலால்) அலுவலரால் புலத்தணிக்கை மற்றும் விசாரணை செய்யப்பட்டு புதிய உரிமம் வழங்க / உரிமம் புதுப்பித்தல் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியர் அவர்களால் உரிமம் உழங்கப்படுகிறது.

தொடர்பு:

உதவி ஆணையர் (கலால்) காஞ்சிபுரம்

மாவட்ட ஆட்சியர்

2?வது தளம், காஞ்சிபுரம்

அலுவலகதொலைபேசிஎண்:-  044-27237081/ Intercom : 250

அலுவலக மின்னஞ்சல் :- excisekpmv@gmail.com