மூடு

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் – மகளிர் திட்டம்

தேதி : 09/08/2021 -

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் 2012 – 13 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசினால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  ஊரக ஏழை மக்களுக்காக வலுவான மற்றும் துடிப்பான சமுதாயம் சார்ந்த அமைப்புகளை உருவாக்கி, வாழ்வாதாரத்தை உயர்த்தி, நிதி மற்றும் பல்வேறு சேவைகளை முறையாகப் பெற வழிவகை செய்து, குடும்ப வருமானத்தை பெருக்குவதே இவ்வியக்கத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ் சமுதாயத்தில் உள்ள ஏழைகள், மிகவும் ஏழைகள், நலிவுற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள்

1.ஊரகப் பகுதியில் ஏழை மக்களின் வளர்ச்சிக்காக சமுதாயம் சார்ந்த அமைப்புகளை உருவாக்கி வலுப்படுத்துதல்
2.விடுபட்ட ஏழை மக்களை கண்டறிந்து அவர்களை சுய உதவிக் குழுவில் ஒருங்கிணைத்தல்.
3.ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்புகள் உருவாக்கம் மற்றும் வலுபடுத்துதல்.
4.சமூக மேம்பாட்டிற்கான திறன் வளர்ப்புப் பயிற்சிகளின் மூலம் ஊரக ஏழை மக்களை மேம்பாடு அடையச் செய்தல்
5.சுய உதவிக் குழு உறுப்பினர்கள் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர்களுக்கு கடன் வழங்கும் பொருட்டு குழுக்களுக்கு நிதியுதவி வழங்குதல்
6.சுய உதவிக் குழு உற்பத்திப் பொருட்களின் தரத்தினை மேம்படுத்தி சந்தைப்படுத்துதலை எளிதாக்குதல்
7.கிராமப்புற ஏழை மக்கள் அனைவரும் அடிப்படை வசதிகளைப் பெறக்கூடிய வாய்ப்புகளை உருவாக்குதல், சுகாதாரம் மற்றும் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்கான பயிற்சிகள் வழங்குதல்

திட்டத்தின் பெயர் திட்டம் பற்றிய விளக்கம் தகுதி நிலை (நன்மை / சேவையைப் பெறக்கூடியவர்கள்) நன்மை/சேவையைப் பெறுவதற்கான நடைமுறை
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் குழு உறுப்பினர்களிடையே சேமிப்பு பழக்கத்தையும், அவர்களுக்குள்ளேயே உள்கடன் வழங்குதலையும், ஒன்று கூடி ஒற்றுமையாகவும் மற்றும் ஜனநாயக ரீதியாகவும் முடிவெடுக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்துவதும் சுய உதவிக் குழுக்களின் நோக்கங்களாகும். மகளிரின் பொருளாதார மற்றும் சமுதாய மேம்பாட்டினை உறுதிசெய்யும் பொருட்டு சுய உதவிக் குழுக்கள் முறையான கூட்டம் நடத்துதல், சேமித்தல், உள்கடன் வழங்குதல், கடன் திரும்ப செலுத்துதல், முறையான கணக்குப் பதிவேடுகள் பராமரித்தல் ஆகிய 5 கோட்பாடுகளை கடைப்பிடித்து சிறப்புடன் செயல்பட பயிற்சி வழங்கப்படுகிறது. ஒரே பகுதியில் வசிக்கும் 18 முதல் 60 வயதுக்கு உட்பட்ட 12 முதல் 20 மகளிரை உறுப்பினர்களாகக் கொண்டு சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன.

குழுக்களின் வகை :
*மகளிர் சுய உதவி குழு
*முதியோர் சுய உதவி குழு
*மாற்றுத்திறனாளிகள் சுய உதவி குழு

 

 

 

 

1.ஊராட்சியில் ஓரே பகுதியை சேர்ந்த 12 முதல் 20 நபர்கள் ஒன்றிணைந்து குழு துவங்கப்படுவதற்கு தீர்மானம் இயற்றப்படவேண்டும்

2.குழுவில் ஒன்றிணைந்த நபர்களில் 2 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டு வங்கி  கணக்கு துவங்கிட வேண்டும்

3.குழு உறுப்பினர்களின் அனைத்து விவரங்களையும் உரிய படிவத்தில் சேகரித்து ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிடம் சமர்ப்பிக்கப்படவேண்டும்

4.NRLM இணையதளத்தில் குழு மற்றும் உறுப்பினர் விவரங்களை பதிவேற்றம்     செய்திடவேண்டும்

சுய உதவிக் குழுக்களுக்கு ஆதாரநிதி        ஆதார நிதியானது அவர்களை ஊக்குவிப்பதற்கு ஒரு காரணியாகவும், அவர்களின் சேமிப்போடு தொகுப்பு நிதியை அதிகப்படுத்தி அதிகமான உறுப்பினர்கள் உள்கடன் பெறுவதற்கும் வழிவகை செய்கிறது 1. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலமாக குழு உருவாக்கப்பட்டிருக்கவேண்டும்.
2. சுய உதவி குழுக்கள் துவங்கப்பட்டு  மூன்று மாதம் முடிவுபெற்றிருக்கவேண்டும்.
3. தரமதிப்பீட்டில் A அல்லது B மதிப்பீடு பெறவேண்டும்.
4. 80% ஏழை மக்களைக் கொண்ட மகளிர் குழுக்களுக்கும் மாற்றுதிறனாளி குழுக்களுக்கும் வழங்கப்படுகிறது.
1.சம்மந்தப்பட்ட ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் மூலமாக தரமதிப்பீடு செய்திடவேண்டும்

2.ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் மூலமாக மாவட்ட அலுவலகத்திற்று ஆதார நிதி கோறும் விண்ணப்பம்

3.தரமதிப்பீடு செய்யப்பட்ட சுய உதவிக் குழுக்களுக்கு ஆதார நிதியாக குழு ஒன்றுக்கு ரூ.15,000/- வீதம் நிதி வழங்கப்படுகிறது

4.புதிய சுய உதவி குழுவில் இணைக்கப்பட்ட ஏழை மக்கள் ஆதரா நிதி மூலம பயன்பெறுவார்கள்

சமுதாய முதலீட்டு நிதி          சுய உதவிக் குழுக்களுக்கு பொருளாதார செயல்பாடுகளுக்காக இத்திட்டத்தின் கீழ் கடனாக வழங்கப்படும் தொகை சமுதாய முதலீட்டு நிதியாகும். சமுதாய முதலீட்டு நிதியானது ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு விடுவிக்கப்பட்டு, அவைகளின் மூலம் தகுதியான சுய உதவிக் குழுக்களுக்கு பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விடுவிக்கப்படுகிறது. சுய உதவிக் குழுவிற்கு அதிகபட்ச தொகையாக    ரூ.50, 000/- வீதம் ஆண்டிற்கு 9 சதவீத வட்டியுடன் கடனாக வழங்கப்படுகிறது. சமுதாய முதலீட்டு நிதி வாழ்வாதார மேம்பாட்டிற்காக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தவணைகளில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலம் குறைந்தபட்சம் 50 சதவீதம் சுய உதவிக் குழுக்களுக்கு கடனாக விடுவிக்கப்படுகிறது. 1.குழு துவங்கப்பட்டு ஆறு மாதம் நிறைவுபெற்றிருக்க வேண்டும்

2.தரமதிப்பீட்டில் A அல்லது B மதிப்பீடு பெறவேண்டும்

3.குழுவிற்கு நுண் நிதி திட்டம் தயார் செய்திருக்க வேண்டும்

1.சம்மந்தப்பட்ட ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிடம் நிதி கோறி விண்ணப்பம் அளித்திடவேண்டும்.

2.குழுவிற்கு நுண்நிதி திட்டம் தயார் செய்து விண்ணப்பதுடன் அளிக்க வேண்டும்

3.ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் செயற்குழுவில் தீர்மானம் செய்யப்பட்டு குழுவிற்கு  ரு.50,000 வீதம் 9% வட்டியில் கடனாக வழங்கப்படுகிறது.

4.புதிய சுய உதவி குழுக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படும். பின்னர் சுழற்சி முறையில் அனைத்து குழுக்களுக்கும் வழங்கப்படும்

நலிவுற்றோர் நிதி
மக்கள் நிலை ஆய்வின் போது மாற்றுத்திறனாளி மற்றும் நலிவுற்றோர் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு நலிவுற்றோர் மேம்பாட்டு நிதியாக ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை தனி நபர் கடனாக வழங்கப்பட்டு வருகிறது. நலிவுற்றோருக்கான நிதியானது மாற்றுத்திறனாளிகளின் உணவுப் பாதுகாப்புக்கும், வாழ்வாதார செயல்பாடுகளுக்கும், உடல் நலக் குறைவு அல்லது எதிர்பாரா மருத்துவ செலவிற்கும் மற்றும் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டோரின் மறுவாழ்விற்கும் பயன்படுத்தப்படுகிறது. நலிவுநிலைக் குறைப்பு நிதி கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களின் மூலம் தனிநபர் கடனாக வழங்கப்படுகிறது மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோருக்கு (ஆதரவற்ற விதவை, கணவனால் கைவிடப்பட்டோர், ஆதரவற்ற முதியோர், பழங்குடியினர், திருநங்கைகள்) ஆகியோர் நலிவுற்றோர் நிதியை கடனாக பெற தகுதியுடையவர் ஆவர் 1.கடனுதவி தேவைப்படுவோர் சம்மந்தப்பட்ட கிராம் வறுமை ஒழிப்பு சங்கத்திடம் விண்ணப்பம் அளிக்கவேண்டும்.

2.தகுதியுடைய நபர்களுக்கு கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில் தீர்மானம் செய்யப்பட்டு தொழில் துவங்க கடனுதவி வழங்கப்படுகிறது

3நலிவுற்றோர் நிதி குறைந்தபட்சம் ரூ. 10,000முதல் அதிகபட்சம் ரூ.25,000 வரை 6% வட்டியில் கடனுதவியாக வழங்கப்படும்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு  நேரடி வங்கி கடன் இணைப்பு
வங்கி கடன் இணைப்பு திட்டம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் நிதி தேவையை பூர்த்தி செய்வதன்  மூலம் அவர்களின் வருமானத்தினை பெருக்கி படிப்படியாக வருமையிலிருந்து முன்னேரவும் வழிவகை செய்கிறது. மேலும் உறுப்பினர்களின் பெருளாதாரம் மேம்பட வாழ்வாதார நடவடிக்கைகள் மேற்கொள்ள ஊக்குவிக்கிறது 1. மகளிர் சுய உதவிக்குழு ஊராட்சி அளவிலா கூட்டமைப்பில் இணைந்திருத்தல் வேண்டும்.
2. மகளிர் சுய உதவிக்குழு முறையான சேமிப்பு, தொடர் கூட்டம், முறையான உள்கடன் வழங்குதல், முறையாக கடனை திரும்ப செலுத்துதல், பதிவேடுகள் பறாமறித்தல் ஆகிய கோட்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும்.
3. மகளிர் சுய உதவிக்குழு துவங்கி 6 மாதம் நிறைவு பெற்றிருக்கவேண்டும்.
4. மகளிர் சுய குழுக்கள் தரமதிப்பீட்டில் A அல்லது B மதிப்பீடு பெறவேண்டும்.
1.தகுதியான மகளிர் சுய உதவிக்குழுக்கள் சம்மந்தப்பட்ட வங்கியாளர் மற்றும் திட்ட பணியாளர் கொண்ட குழுவால் தரமதிப்பீடு செய்யப்படும்.
2. தரமதிப்பீட்டில் A அல்லது B மதிப்பீடு பெற்ற குழுக்களுக்கு வங்கி கடன் ஆவணங்களை சம்மந்தப்பட்ட வங்கியில் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
3. வங்கி மேலாளர் அவர்கள் குழு ஆவணங்களை சரிபார்த்தப்பின்னர் குழுவின் சேமிப்பு அடிப்படையில் வங்கி கடனை வழங்குவார்.
4.மகளிர் சுய உதவிக்குழுவிற்கு பின்வரும் நடைமுறைகளுக்கேற்ப கடன் தொகை வழங்கப்டும்.முதல் இணைப்பு : குழுவின் செமிப்பு தொகையில் 6 மடங்கு அல்லது குறைந்த பட்சம் ரூ.1.00 இலட்சத்திற்கு மேல்.
*  இரண்டாம் இணைப்பு : குழுவின் செமிப்பு தொகையில் 8 மடங்கு அல்லது குறைந்த பட்சம் ரூ.2.00 இலட்சத்திற்கு மேல்.
*  மூன்றாம் இணைப்பு : குறைந்த பட்சம் ரூ.3.00 இலட்சம், குழுவின் நுண் கடன் திட்டத்தின்  அடிப்படையில் மற்றும் கூட்டமைப்பினால் மதிப்பீடு செய்யப்பட்ட முந்தைய கடன் திருப்ப முறை.
*  நான்காவது இணைப்பு அதற்கும் மேல் : குறைந்த பட்சம் ரூ.5.00 இலட்சம், குழுவின் நுண் கடன் திட்டத்தின்  அடிப்படையில் மற்றும் கூட்டமைப்பினால் மதிப்பீடு செய்யப்பட்ட முந்தைய கடன் திருப்ப முறை மற்றும் செயல்பாடுகள்.
* மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் அவர்களின் அறிவிப்பின் படி மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பிணையம் இல்லா அதிகபட்ச  கடன் தொகை ரூ.10 இலட்சத்தில் இருந்து ரூ.20 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் வாழ்வாதார நடவடிக்கைகளில்  ஈடுபட வாய்ப்பளிக்கிறது
வட்டி மானியம்
மத்திய அரசு மகளிர் சுய உதவிக்குழுக்களின் முறையான கடன் திருப்பத்தினை ஊக்குவிற்பதற்கு வட்டி மானியம் திட்டத்தினை 2013-14 வருடத்தில் அறிமுகப்படுத்தியது. இதன் முலம் மகளிர் உதவிக்குழுக்கள் வங்கியில் பெறும் கடனிற்கு செலுத்தும் வட்டியில் அதிகபட்சம் 5.5% வரை வட்டி மானியமாக நேரடியாக குழுவின் வங்கி கணக்கிற்கு திரும்ப வழங்கப்படும். 1. மகளிர் சுய உதவிக்குழுக்கள் மத்திய அரசின் NRLM இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யதிருக்க வேண்டும்.
2. வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடன் தொகையினை வட்டித் தொகையுடன் சேர்த்து குறிப்பிட்ட தவணைக்குள் தவறாமல் திரும்ப கட்டி முடிக்க வேண்டும்.
1.சுய உதவிக் குழுக்கள் வங்கியில் பெறும் கடன் விவரம் மற்றும் திரும்ப செலுத்தப்படும் விவரங்களை சம்மந்தப்பட்ட வங்கியாளர்கள் NRLM Bank Linkage  இணையதளத்தில் பதிவேற்றம் செய்து முடித்திருக்க வேண்டும்

2.வங்கியில் பெறும் கடன் தொகையினை தவணை தவறாமல் முறையாக திரும்ப செலுத்திய குழுக்கள் விவரம் இணையதளத்தில் இருந்து பட்டியல் தயார்  செய்யப்படும்

3.மாநில அலுவலகத்தின் மூலமாக குழுக்களின் விவரம் மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்

4.மாவட்ட  அளவில்  குழுக்களின்  விவரம் சரிபார்க்கப்பட்டு மாவட்ட அளவிலான கமிட்டியின் ஒப்புதலுடன் திரும்ப மாநில அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்

5.மாவட்ட அளவிலான கமிட்டியில் பரிந்துறை செய்து அனுப்பி வைக்கப்பட்ட குழுக்களுக்கு அதிகபட்சம் 5.5% வட்டி மானியம் நேரடியாக குழுவின் வங்கி

 

 

தீன் தயாள் உபாத்யாயா கிராம  கௌசல்யா யோஜனா (DDU-GKY)
     தீன் தயாள் உபாத்யாயா கிராம  கௌசல்யா யோஜனா (DDU-GKY) என்பது கிராமப்புற ஏழை இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட திறன் மேம்பாட்டுத் திட்டமாகும், இது இந்திய அரசின் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் மாநில அரசின் மூலம் 60:40 விகிதத்தில் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. DDU-GKY இன் பார்வை “கிராமப்புற ஏழை இளைஞர்களை பொருளாதார ரீதியாக சுதந்திரமான மற்றும் உலகளாவிய தொடர்புடைய பணியாளர்களாக மாற்றுவது” ஆகும். இந்த திட்டமானது 18-35 வயதுக்குட்பட்ட கிராமப்புற இளைஞர்களை திறமைப்படுத்தி, அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை விட வழக்கமான மாத ஊதியத்துடன் கூடிய வேலைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தீன் தயாள் உபாத்யாயா கிராம  கௌசல்யா யோஜனா   (DDU-GKY) தமிழ்நாடு மாநில ஊராக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 2012-14 ஆம் ஆண்டு முதல் ‘ஆஜிவிகா’ எனும் பெயரில் செயல்படுத்தப்பட்டு வந்தது.

தீன் தயாள் உபாத்யா கிராமின் கௌசல்யா யோஜனா (DDU-GKY)” என்ற பெயரில் இளைஞர்களுக்கான திறன் வளர்ப்புப் பயிற்சித் திட்டமானது 2014ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டுவருகிறது

தீன் தயாள் உபாத்யா கிராமின் கௌசல்யா யோஜனா (DDU-GKY) திட்டமானது மத்திய அரசின் 60% பங்களிப்புடனும், மாநில அரசின் 40% பங்களிப்புடனும், தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் மூலம் தமிழகத்தின் 31 மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது

 

தீன் தயாள் உபாத்யா கிராமின் கௌசல்யா யோஜனா (DDU-GKY) திட்டத்தின் கீழ் பயிற்சி பெற தேவையான தகுதிகள்.
ஊரக பகுதியின் ஏழைக் குடும்பங்களின் உள்ள 18 முதல் 35 வயது வரையிலான ஆண், பெண் இருபாலரும் இப்பயிற்சிக்கு தகுதியானவர்களாக கருதப்படுவார்கள். (நலிவடைந்த பிரிவினராக பழங்குடியினர், விதவைகள், கைவிடபட்ட பெண்கள், விடுவிக்கப்பட்ட கொத்தடிமைகள் மற்றும் திருநங்கைள் ஆகியோருக்கு வயது வரம்பு 45 ஆகும்).
1.18 முதல் 35 வயதிற்குட்பட்ட கிராமப்புற இளைஞர்களின் திறன் விபரங்களை சேகரித்து பதிவு  செய்திட மத்திய அரசின் ஊரக மேம்பாட்டு அமைச்சகம் திறன் வளர்ப்பு பயிற்சிக்கான பதிவு செயலியை (கௌசல் பஞ்சி) துவக்கியுள்ளது. திட்ட செயலாக்க முகமைகள் இச்செயலி மூலம் பயிற்சியாளர்களின் திறன் தேவைகளை பதிவு செய்வதில் பங்களிக்க முடியும்

2.ஒரு இளைஞர் ஏற்கனவே உள்ள சமூக பொருளாதார சாதி வாரியான கணக்கெடுப்பின் (SECC) விவரங்களை பயன்படுத்தியோ அல்லது புதிய விண்ணப்பதாராகவோ விவரங்களை உள்ளிடுவதன் மூலம் தன்னை பதிவு செய்யலாம்

3.சுகாதார பாதுகாப்பு (Health Care), தகவல் தொழில்நுட்ப தேவை(IT & ITES)
ஆடை வடிவமைப்பு (Apparel), கட்டுமானத் துறை, ஆட்டோமோடிவ், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் (Tourism & Hospitality) தளவாடங்கள்(Logistic), அழகுக்கலை, போன்ற எளிதில் வேலைவாய்ப்ப பெறும்துறைகளில் பெரும்பாலான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் குறைந்தது மூன்று மாதங்கள் முதல் அதிகபட்சம் ஓராண்டு வரை திறன் வளர்ப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன

4.பயிற்சியின் போது போக்குவரத்து, உணவு, தங்குமிடச்செலவு, சீருடை, பாடப் புத்தங்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்

5.பயிற்சியின்போது பணியிடைப் பயிற்சி (On job Training) மற்றும் மென்திறன் பயிற்சி (Soft Skill) வழங்கப்படும்

6.பயிற்சியின்போது வரைப்பட்டிகை(Tablet Computer) கற்றல் பயன்பாட்டிற்கு அனைத்து மாணவர்களுக்கும் தினசரி வழங்கப்படும்

7.பயிற்சி முடிக்கப்பட்டப்பின் செக்டார் ஸ்கில் வுன்சில் ( SSC) மற்றும் NCVT போன்ற அமைப்புகளின் மூலம் தேர்வு நடத்தப்படும் சான்றிதழ் வழங்கப்படுகிறது

8.பயிற்சி முடித்து பணியில் சேர்ந்த இளைஞர்களுக்கு 2 மாதம் முதல் 6 மாதம் வரை ஊக்கத்தொகை ரூ.1000/- வழங்கப்படும்

9.பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்யும் இளைஞர்களுக்குத் தனியார் நிறுவனங்களில் குறைந்தது ரூ. 6000/- முதல் ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படுகிறது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் – காஞ்சிபுரம் மாவட்டம்

மாவட்டம்
வ.எண் பெயர் (திரு/திருமதி) பதவி மின் அஞ்சல்  தொலைபேசி கைபேசி
1 ஜி. சீனிவாசராவ் திட்ட அலுவலர் dpiu_kpm@yahoo.com (044)-27236348 9444094280
2 காலியிடம் உதவி திட்ட அலுவலர்
(நிர்வாகம் (ம) கணக்கு)
9444094282
3 எஸ். மோகன் பாபு உதவி திட்ட அலுவலர்
(கண்காணிப்பு (ம) மதிப்பீடு)
9444094284
4 கே. அமுல்ராஜ் உதவி திட்ட அலுவலர்
(சமூக ஒருங்கிணைப்பு (ம) நிறுவன கட்டமைப்பு)
9444094285
5 வி. வீரமணி உதவி திட்ட அலுவலர்
(நிதி உள்ளாக்கம்)
9444094283
6 எம். வால்டர்பால் உதவி திட்ட அலுவலர்
(வாழ்வாதாரம்)
9444094281
7 கே. கங்காகௌரி உதவி திட்ட அலுவலர்
(நகர்புற வாழ்வாதார இயக்கம்)
9976018927

 

வட்டாரம்
வ.எண் வட்டாரத்தின் பெயர் பெயர் (திரு/திருமதி) பதவி மின் அஞ்சல் முகவரி கைபேசி
1 காஞ்சிபுரம் எம். நித்தியானந்தம் வட்டார இயக்க மேலாளர் bmmukanchipuram@gmail.com 9994584573
2 குன்றத்தூர் கே. எலிசபத்ராணி வட்டார இயக்க மேலாளர் bmmukundrathur@gmail.com 9600129252
3 திருப்பெரும்புதூர் எஸ். சிவகாமி வட்டார இயக்க மேலாளர் bmmusriperumbudur@gmail.com 7550375749
4 உத்திரமேரூர் எம். இலட்சுமணன் வட்டார இயக்க மேலாளர் bmmuuthiramerur@gmail.com 8098721055
5 வாலாஜாபாத் அ. நிர்மலா வட்டார இயக்க மேலாளர் bmmuwalajabad@gmail.com 9843830219

 

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:-

திட்ட இயக்குநர்
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்/மகளிர் திட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
காஞ்சிபுரம்.

 

 

 

பயனாளி:

TNSRLM/ MAHALIRTHITTAM

பயன்கள்:

TNSRLM/ MAHALIRTHITTAM

விண்ணப்பிப்பது எப்படி?

TNSRLM/ MAHALIRTHITTAM