மூடு

தமிழ்நாடு மாநில நகர்புற வாழ்வாதார இயக்கம் /மகளிர் திட்டம்

தேதி : 09/08/2021 -

தமிழ்நாடு மாநில நகர்புற வாழ்வாதார இயக்கம் 2016 – 17 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசினால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.நகர்புற ஏழை மக்களுக்காக வலுவான சமுதாயம் சார்ந்த அமைப்புகளை உருவாக்கி, நிதி மற்றும் பல்வேறு சேவைகளை முறையாகப் பெற வழிவகை செய்து  வாழ்வாதாரத்தை உயர்த்தி குடும்ப வருமானத்தை பெருக்குவதே இவ்வியக்கத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ் சமுதாயத்தில் உள்ள ஏழைகள், மிகவும் ஏழைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றோரே இலக்கு மக்கள் ஆவர்.

திட்டத்தின் பெயர் திட்டம் பற்றிய விளக்கம் தகுதி நிலை (நன்மை / சேவையைப் பெறக்கூடியவர்கள்) நன்மை/சேவையைப் பெறுவதற்கான நடைமுறை
புதிய சுய உதவிக்குழுக்கள் அமைத்தல் குழு உறுப்பினர்களிடையே சேமிப்பு பழக்கத்தையும், அவர்களுக்குள்ளேயே உள்கடன் வழங்குதலையும், ஒன்று கூடி ஒற்றுமையாகவும் மற்றும் ஜனநாயக ரீதியாகவும் முடிவெடுக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்துவதும் சுய உதவிக் குழுக்களின் நோக்கங்களாகும். மகளிரின் பொருளாதார மற்றும் சமுதாய மேம்பாட்டினை உறுதிசெய்யும் பொருட்டு சுய உதவிக் குழுக்கள் முறையான கூட்டம் நடத்துதல், சேமித்தல், உள்கடன் வழங்குதல், கடன் திரும்ப செலுத்துதல், முறையான கணக்குப் பதிவேடுகள் பராமரித்தல் ஆகிய 5 கோட்பாடுகளை கடைப்பிடித்து சிறப்புடன் செயல்பட பயிற்சி வழங்கப்படுகிறது. ஒரே பகுதியில் வசிக்கும் 18    முதல் 60 வயதுக்கு உட்பட்ட 12 முதல் 20 மகளிரை உறுப்பினர்களாகக் கொண்டு சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன.

குழுக்களின் வகை :

1.மகளிர் சுய உதவி குழு

2.மாற்றுத்திறனாளிகள் சுய உதவி குழு

1. நகர்புற பகுதியில் ஏழை மக்களின் வளர்ச்சிக்காக சமுதாயம் சார்ந்த அமைப்புகளை உருவாக்கி வலுப்படுத்துதல்.

2. விடுபட்ட ஏழை மக்களை கண்டறிந்து அவர்களை சுய உதவிக் குழுவில் ஒருங்கிணைத்தல்.

3. மிகவும் ஏழைகள், ஏழைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியயோரிடத்தில் சிறப்பு கவனம் செலுத்துதல்.

4. சமூக மேம்பாட்டிற்கான திறன் வளர்ப்புப் பயிற்சிகளின் மூலம் ஊரக ஏழை மக்களை மேம்பாடு அடையச் செய்தல்.

5. சுய உதவிக் குழு உறுப்பினர்கள் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர்களுக்கு கடன் வழங்கும் பொருட்டு குழுக்களுக்கு நிதியுதவி வழங்குதல்.

6. சுய உதவிக் குழு உற்பத்திப் பொருட்களின் தரத்தினை மேம்படுத்தி சந்தைப்படுத்துதலை எளிதாக்குதல்.

7.நகர்புற ஏழை மக்கள் அனைவரும் அடிப்படை வசதிகளைப் பெறக்கூடிய வாய்ப்புகளை உருவாக்குதல், சுகாதாரம் மற்றும் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்கான பயிற்சிகள் வழங்குதல்.

சுய உதவிக் குழுக்களுக்கு மான்யம் மான்ய  நிதியானது அவர்களை ஊக்குவிப்பதற்கு ஒரு காரணியாகவும், அவர்களின் சேமிப்போடு தொகுப்பு நிதியை அதிகப்படுத்தி அதிகமான உறுப்பினர்கள் உள்கடன் பெறுவதற்கும் வழிவகை செய்கிறது. 1. தமிழ்நாடு மாநில நகர்புற வாழ்வாதார இயக்கம் மூலமாக குழு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
2. சுய உதவி குழுக்கள் துவங்கப்பட்டு  மூன்று மாதம் முடிவுபெற்றிருக்கவேண்டும்.
3. தரமதிப்பீட்டில் A அல்லது B மதிப்பீடு பெறவேண்டும்.
4. 70% ஏழை மக்களைக் கொண்ட மகளிர் குழுக்களுக்கும் ,மாற்றுதிறனாளி குழுக்களுக்கும் வழங்கப்படுகிறது.
1. சுய உதவிக் குழுக்கள் முறையான கூட்டம் நடத்துதல், சேமித்தல், உள்கடன் வழங்குதல், கடன் திரும்ப செலுத்துதல், முறையான கணக்குப் பதிவேடுகள் பராமரித்தல் ஆகிய 5 கோட்பாடுகளை கடைப்பிடித்து.
2. ஊக்குநர் (ம) பிரதிநிதி  மற்றும் உறுப்பினர் பயிற்சி அளிக்கப்பட்டு மூன்று மாதம் முடிவுபெற்ற குழுக்களை  தரமதிப்பீடு செய்து மாவட்ட அலுவலகத்தின் மூலம் சரிபார்த்து பின் ஒப்புதல் அளித்த குழுக்களை திட்ட இயக்குநர்அ வர்களின் கையொப்பம் பெற்று பின் தரைமை அலுவலகம் அனுப்ப வேண்டும்.
3. தரமதிப்பீடு செய்யப்பட்ட சுய உதவிக் குழுக்களுக்கு ஆதார நிதியாக குழு ஒன்றுக்கு ரூ.10,000/- வீதம் நிதி வழங்கப்படுகிறது.
4. புதிய சுய உதவி குழுவில் இணைக்கப்பட்ட ஏழை மக்கள் ஆதரா நிதி மூலம் பயன்பெறுவார்கள்
சுய வேலை வாய்ப்புத் திட்டம் தனி நபர் கடன் தனி நபர் கடன்   திட்டத்தில்  மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் நிதி தேவையை பூர்த்தி செய்வதன்  மூலம் அவர்களின் வருமானத்தினை பெருக்கி படிப்படியாக வருமையிலிருந்து முன்னேரவும் வழிவகை செய்கிறது. மேலும் உறுப்பினர்களின் பெருளாதாரம் மேம்பட வாழ்வாதார நடவடிக்கைகள் மேற்கொள்ள ஊக்குவிக்கிறது. * தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பயனாளிகள் 18 வயதை அடைந்திருக்க வேண்டும்.                                                         *தனிநபர் கடந்த 6 மாதங்களுக்கு சரியான பரிவர்த்தனை வரலாற்றைக் கொண்டிருக்க வேண்டும்                                                          * நிதி உதவிக்காக தனிப்பட்ட நபரினை ஊக்குவிக்கப்பட்டு வங்கிகளுடன் இணைக்கப்பட வேண்டும். நிதி உதவிக்காக தனிப்பட்ட நபரினை ஊக்குவிக்கப்பட்டு வங்கிகளுடன் இணைக்கப்பட வேண்டும்.

* விண்ணப்பம் சம்பந்தப்பபட்ட வங்கியில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்

* கள சரிபார்ப்புக்குப் பிறகு வங்கியாளர்கள் தனிநபர் வங்கிக் கணக்கிற்கு கடன் வழங்கப்படும்.                                                                               *அதிகபட்சமாக ஒரு நபருக்கு ரூ.10,000/-  கடன் வழங்கப்படுகிறது.

மகளிர் சுய உதவிக் குழுக்களுகான கடன் வங்கி கடன் இணைப்பு திட்டம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் நிதி தேவையை பூர்த்தி செய்வதன்  மூலம் அவர்களின் வருமானத்தினை பெருக்கி படிப்படியாக வருமையிலிருந்து முன்னேரவும் வழிவகை செய்கிறது. மேலும் உறுப்பினர்களின் பெருளாதாரம் மேம்பட வாழ்வாதார நடவடிக்கைகள் மேற்கொள்ள ஊக்குவிக்கிறது.
  1. நகர்புறங்களில் அமைக்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவில் இருந்து ஒரு குழுவிற்கு 5 நபர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். குழுக்கடன் பெற்ற  மகளிர்கள்  தங்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்த  உதவுகிறது.

2.  மகளிர் சுய உதவிக்குழுக்களால் மேற்கொள்ளப்படும்  வாழ்வாதார நடவடிக்கைகள்  திட்ட இயக்குநர் மற்றும் வங்கி மேலாளர்கள் சரிபார்க்கப்படும்.

1. தகுதியான மகளிர் சுய உதவிக்குழுக்கள் சம்மந்தப்பட்ட வங்கியில் விண்ணப்பிக்க பட்டு பின் வங்கியாளர் மற்றும் திட்ட பணியாளர் கொண்ட குழுவால் தரமதிப்பீடு செய்யப்படும்.
2.தரமதிப்பீட்டில் A அல்லது B மதிப்பீடு பெற்ற குழுக்களுக்கு வங்கி கடன் ஆவணங்களை சம்மந்தப்பட்ட வங்கியில் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
3. வங்கி மேலாளர் அவர்கள் குழு ஆவணங்களை சரிபார்த்தப்பின்னர் குழுவின் சேமிப்பு அடிப்படையில் வங்கி கடனை வழங்குவார்.
4.அதிகபட்சமாக ஒரு குழுவிற்கு  ரூ.1,00,000/-  கடன் வழங்கப்படுகிறது.
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு  நேரடி வங்கி கடன் இணைப்பு வங்கி கடன் இணைப்பு திட்டம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் நிதி தேவையை பூர்த்தி செய்வதன்  மூலம் அவர்களின் வருமானத்தினை பெருக்கி படிப்படியாக வருமையிலிருந்து முன்னேரவும் வழிவகை செய்கிறது. மேலும் உறுப்பினர்களின் பெருளாதாரம் மேம்பட வாழ்வாதார நடவடிக்கைகள் மேற்கொள்ள ஊக்குவிக்கிறது. 1. மகளிர் சுய உதவிக்குழு பகுதி அளவிலா கூட்டமைப்பில் இணைந்திருத்தல் வேண்டும்.
2. மகளிர் சுய உதவிக்குழு முறையான சேமிப்பு, தொடர் கூட்டம், முறையான உள்கடன் வழங்குதல், முறையாக கடனை திரும்ப செலுத்துதல், பதிவேடுகள் பறாமறித்தல் ஆகிய கோட்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும்.
3. மகளிர் சுய உதவிக்குழு துவங்கி 6 மாதம் நிறைவு பெற்றிருக்கவேண்டும்.
4. மகளிர் சுய குழுக்கள் தரமதிப்பீட்டில் A அல்லது B மதிப்பீடு பெறவேண்டும்.
1. தகுதியான மகளிர் சுய உதவிக்குழுக்கள் சம்மந்தப்பட்ட வங்கியாளர் மற்றும் திட்ட பணியாளர் கொண்ட குழுவால் தரமதிப்பீடு செய்யப்படும்.
2.தரமதிப்பீட்டில் A அல்லது B மதிப்பீடு பெற்ற குழுக்களுக்கு வங்கி கடன் ஆவணங்களை சம்மந்தப்பட்ட வங்கியில் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
3. வங்கி மேலாளர் அவர்கள் குழு ஆவணங்களை சரிபார்த்தப்பின்னர் குழுவின் சேமிப்பு அடிப்படையில் வங்கி கடனை வழங்குவார்.
4.மகளிர் சுய உதவிக்குழுவிற்கு பின்வரும் நடைமுறைகளுக்கேற்ப கடன் தொகை வழங்கப்டும்.* முதல் இணைப்பு : குழுவின் செமிப்பு தொகையில் 6 மடங்கு அல்லது குறைந்த பட்சம் ரூ.1.00 இலட்சத்திற்கு மேல்*  இரண்டாம் இணைப்பு : குழுவின் செமிப்பு தொகையில் 8 மடங்கு அல்லது குறைந்த பட்சம் ரூ.2.00 இலட்சத்திற்கு மேல்.*  மூன்றாம் இணைப்பு : குறைந்த பட்சம் ரூ.3.00 இலட்சம், குழுவின் நுண் கடன் திட்டத்தின்  அடிப்படையில் மற்றும் கூட்டமைப்பினால் மதிப்பீடு செய்யப்பட்ட முந்தைய கடன் திருப்ப முறை.
*  நான்காவது இணைப்பு அதற்கும் மேல் : குறைந்த பட்சம் ரூ.5.00 இலட்சம், குழுவின் நுண் கடன் திட்டத்தின்  அடிப்படையில் மற்றும் கூட்டமைப்பினால் மதிப்பீடு செய்யப்பட்ட முந்தைய கடன் திருப்ப முறை மற்றும் செயல்பாடுகள்.
* மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் அவர்களின் அறிவிப்பின் படி மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பிணையம் இல்லா அதிகபட்ச  கடன் தொகை ரூ.10 இலட்சத்தில் இருந்து ரூ.20 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் வாழ்வாதார நடவடிக்கைகளில்  ஈடுபட வாய்ப்பளிக்கிறது.
வேலை    வாய்ப்புடன் கூடிய திறன் சார்ந்த பயிற்சிகள் தமிழ்நாடு மாநில நகர்புற  வாழ்வாதார இயக்கத்தில்  வேலை    வாய்ப்புடன் கூடிய திறன் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் நகர்புற பகுதிகளில்  உள்ள படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு  (ஆண் – பெண்  இருபாலர்களுக்கும்)  தற்பொழுது தேவையான  பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. வேலை    வாய்ப்புடன் கூடிய திறன் சார்ந்த பயிற்சிகள் மூன்று வகையாக வழங்கப்படுகிறது .

1. படித்த வேலையில்லா இளைஞர்களுக்கான பயிற்சி .                                                       2.ஏற்கனவே தொழில் செய்தவற்க்கு தனது திறமையை வளர்பதற்கான பயிற்சி.  3.அனுபவத்தின் மூலம் பெறப்படும் பயிற்சி

  1. வேலை    வாய்ப்புடன் கூடிய திறன் சார்ந்த பயிற்சிகள் குறைந்தது 45 நாட்கள்அளிக்கப்பட்டுகிறது
  2. ஒவ்வொரு நபர்களுக்கும் அளிக்கப்படும் பயிற்சியின் தொகை டூரூ.15,000 கொண்டது.மேலும்பயிற்சிக்கு ஏற்றவாறு தொகையும் மாறும்.
  3. அடிப்படை பயிற்சி மற்றும்  திறன்மேம்பாட்டு பயிற்சிகள் SSC பாட திட்டத்தின் மூலம் அளிக்கப்படுகிறது

பயனாளி:

TNSRLM/ MAHALIRTHITTAM

பயன்கள்:

TNSRLM/ MAHALIRTHITTAM

விண்ணப்பிப்பது எப்படி?

TNSRLM/ MAHALIRTHITTAM