மூடு

சமூகநலத்துறை

தமிழக அரசு ஏழை எளிய மக்களுக்கும் சமுதாயத்தில் நலிவற்ற பிரிவினருக்கும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் சமூக நலத்துறை மாவட்ட சமூகநல அலுவலகம் மூலம் செயல்படுத்தும் திட்டங்களும் அதற்கான தகுதிகளும் பின்வருமாறு.

i.மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித்திட்டம்

நோக்கம் : வறுமைக்கோட்டிற்கு கீழ்வாழும் ஏழைப் பெண்களின்
திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்களுக்கு உதவி
வழங்குதலும், பெண்களின் கல்வி நிலையை உயர்த்துதலும்.

வழங்கப்படும் நிதி உதவி :

திட்டம் -1 :
ரூ.25,000/- (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக 23.05.2016
முதல் 8 கிராம் 22 காரட் தங்க நாணயம
திட்டம் -2: ரூ.50,000/- (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக 23.05.2016 முதல்
8 கிராம் 22 காரட் தங்க நாணயம்
பயன்பெறுபவர் : ஏழைப் பெண்களின் தாய் அல்லது தந்தை பெயரில்
வழங்கலாம், பெற்றோர் இல்லையெனில் மணமகளுக்கு
வழங்கலாம்.

தகுதிகள் :

  1. கல்வித்தகுதி

திட்டம் -1:

   • திருமணத்தன்று மணப்பெண் 10-ம் வகுப்பு வரை பள்ளியில் படித்து முடித்திருக்க வேண்டும் (தேர்ச்சி அல்லது தோல்வி)
   • தனியார் / தொலைதூரக் கல்வி மூலம் படித்து இருந்தால் 10ம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருத்தல் வேண்டும்.
   • பழங்குடியினராக இருந்தால் 5-வது வரை படித்திருக்க வேண்டும்.

திட்டம் -2:

   • பட்டதாரிகள், கல்லூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமாகவோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக் கழங்களிலோ படித்து தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும்.
   • பட்டயப் படிப்பு எனில் தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
  1. திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்,
  2. திருமணத்தன்று மணமகளுக்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும்,

உச்ச வயது வரம்பு இல்லை,

 1. ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டும் உதவித் தொகை
  வழங்கப்படும்
 2. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருத்தல்
  வேண்டும்,
 3. இணைக்கப்பட வேண்டிய சான்றுகள்,
  • வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட வருமான சான்று (நகல்)
  • மணப்பெண்ணின் கல்வி தகுதிக்கான சான்று (நகல்)
  • மணப்பெண்ணின் வயத்திற்கான சான்று (நகல்)
  • திருமண அழைப்பிதழ்
  • மனுதாரரின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
 4. அணுக வேண்டிய அலுவலர்: வட்டார வளர்ச்சி அலுவலர்

ii. ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண
உதவித் திட்டம்

நோக்கம் : ஏழை விதவையரின் மகளின் திருமணத்தை நடத்துவதில் போதிய
நிதிவசதி இல்லாததால், அவர்களுக்கு ஏற்படும் சிரமத்தை
தவிர்க்கும் வகையில் திருமணத்திற்கு உதவி வழங்குதல்.

வழங்கப்படும் நிதி உதவி :
திட்டம் -1 : ரூ.25,000/- (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக 23.05.2016
முதல் 8 கிராம் 22 காரட் தங்க நாணயம்
திட்டம் -2: ரூ.50,000/- (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக 23.05.2016 முதல்
8 கிராம் 22 காரட் தங்க நாணயம்
பயன்பெறுபவர் : மணப்பெண்ணின் விதவைத் தாயிடம் வழங்கப்படும்.
விண்ணப்பித்த விதவைத் தாய் இறந்துவிடும் நேர்வின்
மணமகள் பெயரில் வழங்கப்படும்.

தகுதிகள்(மணப்பெண்) :

  1. கல்வித்தகுதி

திட்டம் -1: கல்வித்தகுதி ஏதும் இல்லை

திட்டம் -2:

   • பட்டதாரிகள்: கல்லூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமாகவோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக் கழங்களிலோ படித்து தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும்.
   • பட்டயப் படிப்பு எனில் தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
  1. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருத்தல்

வேண்டும்,

  1. திருமணத்தன்று மணமகளுக்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும்,

உச்ச வயது வரம்பு இல்லை,

 1. விதவைத் தாயின் ஒரு பெண்ணுக்கு மட்டும் உதவித் தொகை
  வழங்கப்படும்,
 2. திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்,
 3. இணைக்கப்பட வேண்டிய சான்றுகள்,
  • கணவரின் இறப்பு சான்றிதழ் (அ) விதவை சான்று (நகல்)
  • வருமான சான்று (அகல்)
  • மணப்பெண்ணின் வயத்திற்கான சான்று (நகல்)
  • திருமண அழைப்பிதழ் (அசல்)
  • மனுதாரரின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
 4. அணுக வேண்டிய அலுவலர் : வட்டார வளர்ச்சி அலுவலர்

iii.டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித்திட்டம்

நோக்கம் : விதவை மறுமணத்தை ஊக்குவித்து, அவர்களுக்கு மறுவாழ்வு
அளித்தல்
வழங்கப்படும் நிதி உதவி :
திட்டம் -1 :ரூ.25,000/- வழங்கப்படுகிறது. (இதில் ரூ.15,000/- ECS மூலமும்
ரூ.10,000/- தேசிய சேமிப்பு பத்திரமாகவும்) (ம) திருமாங்கல்யம்
செய்வதற்காக 23.05.2016 முதல் 8 கிராம் 22 காரட் தங்க
நாணயம் வழங்கப்படுகிறது.
திட்டம் -2: ரூ.50,000/- வழங்கப்படுகிறது. (இதில் ரூ.30,000/- ECS மூலமும்
ரூ.20,000/- தேசிய சேமிப்பு பத்திரமாகவும்) (ம) திருமாங்கல்யம்
செய்வதற்காக 23.05.2016 முதல் 8 கிராம் 22 காரட் தங்க
நாணயம் வழங்கப்படுகிறது.
பயன்பெறுபவர் : மறுமணம் செய்து கொள்ளும் தம்பதியர்கள்

தகுதிகள் :

  1. கல்வித்தகுதி

திட்டம் -1: கல்வித்தகுதி ஏதும் இல்லை.

திட்டம் -2:

   • பட்டதாரிகள்: கல்லூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமாகவோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக் கழங்களிலோ படித்து தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும்.
   • பட்டயப் படிப்பு எனில் தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
  1. வருமான வரம்பு இல்லை.
  2. மணமகளின் குறைந்தபட்ச வயது 20 ஆக இருத்தல் வேண்டும்.

மணமகனின் வயது 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

 1. திருமண நாளிலிருந்து 6 மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
 2. விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றுகள்
  • விதவைச் சான்று (நகல்)
  • மறுமணத்திற்கான திருமண பத்திரிக்கை சான்று (அசல்)
  • மணமகள் மற்றும் மணமகனின் வயதுச் சான்று (நகல்)
  • பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு தேர்ச்சி சான்று (நகல்)
 3. அணுக வேண்டிய அலுவலர் : வட்டார வளர்ச்சி அலுவலர்

iv.அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவித்
திட்டம்

நோக்கம் : பெற்றோர் இருவரையும் இழந்த ஆதரவற்ற பெண்ணுக்கு
வழங்கப்படும் நிதி உதவி.
வழங்கப்படும் நிதி உதவி :
திட்டம் -1 : ரூ.25,000/- (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக 23.05.2016
முதல் 8 கிராம் 22 காரட் தங்க நாணயம்
திட்டம் -2: ரூ.50,000/- (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக 23.05.2016 முதல்
8 கிராம் 22 காரட் தங்க நாணயம்
பயன்பெறுபவர் : தாய், தந்தை இல்லாத ஆதரவற்ற பெண்கள்.

தகுதிகள்(மணப்பெண்) :

  1. கல்வித்தகுதி

திட்டம் -1: கல்வித்தகுதி ஏதும் இல்லை
திட்டம் -2:

   • பட்டதாரிகள்: கல்லூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமாகவோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக் கழங்களிலோ படித்து தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும்.
   • பட்டயப் படிப்பு எனில் தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
  1. ஆதரவற்ற பெண்/பாதுகாவலரின் ஆண்டு வருமானம் உச்ச வரம்பு
   இல்லை,
  2. திருமணத்தன்று மணமகளுக்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும்,

உச்ச வயது வரம்பு இல்லை,

 1. திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்,
  • இணைக்கப்பட வேண்டிய சான்றுகள்,
 • தாய் (அ) தந்தை இறப்பு சான்றிதழ் (அ) ஆதரவற்ற பெண் என்ற
  சான்று (நகல்)
 • மணப்பெண்ணின் வயத்திற்கான சான்று (நகல்)
 • திருமண அழைப்பிதழ் (அசல்)
 • மனுதாரரின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
 • அணுக வேண்டிய அலுவலர் : வட்டார வளர்ச்சி அலுவலர்

v.டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதி உதவித் திட்டம்

நோக்கம்: சமுதாயத்தில் நிலவும் பிறப்பு அடிப்படையிலான சாதி இன
வேறுபாட்டை அகற்றி தீண்டாமை எனும் கொடுமையை ஒழித்தல்.

வழங்கப்படும் நிதி உதவி :

 • திட்டம் :ரூ.25,000/- வழங்கப்படுகிறது. (இதில் ரூ.15,000/- ECS
  மூலமும் ரூ.10,000/- தேசிய சேமிப்பு பத்திரமாகவும்) (ம)
  திருமாங்கல்யம் செய்வதற்காக 23.05.2016 முதல் 8 கிராம் 22
  காரட் தங்க நாணயம் வழங்கப்படுகிறது.
 • திட்டம் : ரூ.50,000/- வழங்கப்படுகிறது. (இதில் ரூ.30,000/- ECS மூலமும்
  ரூ.20,000/- தேசிய சேமிப்பு பத்திரமாகவும்) (ம) திருமாங்கல்யம்
  செய்வதற்காக 23.05.2016 முதல் 8 கிராம் 22 காரட் தங்க
  நாணயம் வழங்கப்படுகிறது.

பயன்பெறுபவர் : கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர்களுக்கு வழங்கப்படுகிறது.

தகுதிகள் :

பிரிவு 1: தம்பதியரில் எவரேனும் ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது
பழங்குடியினராக இருந்து பிற இனத்தவரை மணந்து கொண்டால்
நிதியுதவி வழங்கப்படும்.
பிரிவு 2 : புதுமணத் தம்பதியரில் ஒருவர் முற்பட்ட (இதர) வகுப்பினராகவும்
மற்றொருவர் பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட
வகுப்பினராக இருந்தால் நிதியுதவி வழங்கப்படும்.

  1. கல்வித்தகுதி
   • திட்டம் : கல்வித்தகுதி ஏதும் இல்லை.
   • திட்டம் :
    பட்டதாரிகள்: கல்லூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமாகவோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக் கழங்களிலோ படித்து தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும்.

பட்டயப் படிப்பு எனில் தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

 1. அணுக வேண்டிய அலுவலர் : வட்டார வளர்ச்சி அலுவலர்

vi. சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம்
வழங்கும் திட்டம்

நோக்கம்:
ஆதரவற்ற பெண்கள் / விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனுடைய ஆண்கள்/பெண்கள் ஆகியோரின் சுயதொழில் திறனை பெருக்கி அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள இலவச தையல் இயந்திரம் வழங்குதல்.

வழங்கப்படும் உதவி : தையல் இயந்திரம் மற்றும் உபகரணங்கள்
பயன்பெறுபவர்:
ஆதரவற்ற பெண்கள்/விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள்,
மாற்றுத் திறனுடைய ஆண்கள்/பெண்கள்

தகுதிகள்:

 1. கல்வித்தகுதி ஏதும் இல்லை
 2. ஆண்டு வருமானம் ரூ.24,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்
 3. 20 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்
   • தையல் தைக்க தெரிந்திருக்க வேண்டும்

  இணைக்கப்பட வேண்டிய சான்றுகள்:

  • ஆதரவற்றோர்/கைவிடப்பட்டவர்/விதவை/மாற்றுத்திறனுடையோர்
   என்பதற்கான சான்றிதழ்
  • குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்
  • வயதுச்சான்றிதழ்
  • விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 6 மாத கால தையல் பயிற்சி தெரிந்தவர் என்பதற்கான சான்றிதழ்
   அணுக வேண்டிய அலுவலர் : வட்டார வளர்ச்சி அலுவலர்

vii.முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்

நோக்கம் :
பெண் கல்வியை மேம்படுத்துதல், பெண் சிசுக் கொலையை ஒழித்தல், ஆண் குழந்தைகளை மட்டுமே விரும்பும் மனப்போக்கினைத் தடுத்தல், சிறு குடும்பமுறையை ஊக்குவித்தல், ஏழைக் குடும்பங்களில் பெண் குழந்தைகளுக்கு நல்வாழ்வு அளித்தல் மற்றும் சமுதாயத்தில் பெண் குழந்தைகளின் நிலையை உயர்த்துதல்.
வழங்கப்படும் உதவி :

 • திட்டம்-: ஒரு பெண் குழந்தை மட்டுமே இருந்தால்
  1.08.2011-க்கு முன்பு பிறந்த குழந்தை எனில் ரூ.22,200/-
  1.08.2011-க்கு பின்பு பிறந்த குழந்தை எனில் ரூ.50,000/- வைப்புத் தொகையாக தாய்மார்களின் பெயரில் வழங்கப்படுகிறது.
 • திட்டம்-: இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருந்தால்
  1.08.2011-க்கு முன்பு பிறந்த குழந்தை எனில் தலா ரூ.15,200/-
  1.08.2011-க்கு பின்பு பிறந்த குழந்தை எனில் தலா ரூ.25,000/- வைப்புத் தொகையாக தாய்மார்களின் பெயரில் வழங்கப்படுகிறது.

பயன்பெறுபவர் : வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் பெண் குழந்தைகள்
வழங்கப்படுவதற்கான கால அளவு : நிலை வைப்புத் தொகை 18ம் ஆண்டின் முடிவில் மீதமுள்ள திரண்ட வட்டியுடன் முதிர்வுத் தொகை சேர்த்து வழங்கப்படும்.

தகுதிகள்:

 • திட்டம்-: ஒரு பெண் குழந்தை எனில் பெற்றோருக்கு ஆண்டு வருமானம் ரூ.50,000/-க்கு குறைவாக இருக்க வேண்டும்
 • திட்டம்-: இரண்டு பெண் குழந்தைகள் எனில் பெற்றோருக்கு ஆண்டு வருமானம் ரூ.24,000/-க்கு குறைவாக இருக்க வேண்டும் 14.10.2014 முதல் ஆண்டு வருமானம் ரூ.72,000/-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

viii.திருநங்கைகள் நலனுக்கான திட்டங்கள் செயல்படுத்துதல்

பதிவு செய்யப்படும் திருநங்கைகள் நேர்முக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, திருநங்கை என கண்டறியப்பட்டு அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
40 வயதிற்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு மாதாந்திர ஓய்வு தொகை ரூ.1000/-, சுயஉதவிக் குழு அமைக்க உதவுதல், சிறு தொழில் பயிற்சி அளித்தல், சுய உதவி குழுக்களுக்கு தொழில் தொடங்க கடனுதவி அளித்தல் போன்ற பல நல திட்ட உதவிகள் திருநங்கைகளுக்கு வழங்கப்படுகிறது.

ix.குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தை செயல்படுத்துதல்

குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் குடும்ப உறவிலுள்ள நபர்களால் வன்முறையை எதிர்கொள்ளும் பெண்கள் வன்முறை சம்பந்தமான புகார்களை மாவட்ட சமூக நல அலுவலகத்திலுள்ள பாதுகாப்பு அலுவலரை அணுகி நீதிமன்றத்தின் மூலம் வழக்கு பதிவு செய்து குறைந்தபட்சம் 60 நாட்களுக்குள் தீர்வு பெறலாம். இச்சட்டத்தின் கீழ் பாதுகாப்பான ஆணைகள் பெறலாம்.

 • குடும்ப வன்முறையிலிருந்து பாதுகாப்பு ஆணை
 • வசிப்பிட உரிமை ஆணை
 • பராமரிப்பு ஆணை மற்றும் பொருளாதார உதவி ஆணை
 • குழந்தை பராமரிப்பு ஆணை
 • நஷ்டஈடு ஆணை பெறலாம்

x.பெற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் பராமரிப்புச் சட்டம் 2007 மற்றும் விதிகள் 2008ஐ செயல்படுத்துதல்

பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் அவர்களுடைய பிள்ளைகள் மற்றும் இரத்தபந்தம் உடையோர்களால் பராமரிக்கப்படவில்லை என்றாலும், தங்களை தங்களால் பராமரித்துக் கொள்ள இயலாத பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் என்றாலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதற்கென்று அமைக்கப்பட்டுள்ள தீர்ப்பாயத்தில் மனு கொடுத்திருப்பின் அதன்பேரில் விசாரணைகள் மேற்கொள்ளவும், நிவாரணங்கள் பெறவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்

xi.வரதட்சணை தடுப்புச் சட்டம் 1961-ஐ செயல்படுத்துதல்

வரதட்சணை தடுப்பு சட்டம் 1961ன் கீழ் பாதிக்கப்பட்ட பெண் வரதட்சணை தடுப்பு அதிகாரி/மாவட்ட சமூக நல அலுவலரிடம் மனு செய்யலாம். பெறப்பட்ட மனுவின் பேரில் இரு தரப்பினரையும் அழைத்து புகாரில் கூறப்பட்டுள்ள விவரங்களை ஆய்வு செய்து வரதட்சணை கொடுமைக்கு மனுதாரர் உட்படுத்தப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட எதிர் மனுதாரர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும். இச்சட்டம் பற்றிய விழிப்புணர்வும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

>

xii.பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் உள்ள சட்டத்தை செயல்படுத்துதல்

பாலியல் சம்பந்தப்பட்ட கீழ்காணும் பிரச்சனைகளை சந்திக்கும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,

 1. உடல் தொடுதல்கள் மற்றும் நேரடியான முயற்சி
 2. பாலியல் தேவைகளை வற்புறத்தி வேண்டி கேட்டுக்கொள்தல்
 3. ஆபாசம் கலந்த ஜாடைமாடையான பேச்சு
 4. ஆபாச படங்களை காட்டுதல்
 5. ஆபாசமான பேச்சு மூலமாகவோ, ஜாடைமாடையாக தொடுதல்களாலோ அல்லது தேவையற்ற வேறுச் செய்கைகளாலோ முயற்சி செய்தல்

xiii.குழந்தை திருமண தடைச் சட்டம் 2008 செயல்படுத்துதல்

18 வயது நிறைவடையாத பெண்ணுக்கும் மற்றும் 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் திருமணம் செய்வதை தடை செய்தல் இச்சட்டத்தின் முக்கிய நோக்கம் குழந்தை திருமணத்தை நடத்துபவருக்கு சட்ட ரீதியான தண்டனையும் குழந்தை திருமணத்திலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ வசதி, சட்ட உதவி, ஆலோசனை வழங்குதல் மற்றும் மறுவாழ்விற்கு இச்சட்டத்தின் மூலம் வழிவகை செய்யப்படுகிறது.

xiv.புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் பயனடையும் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு விலையில்லா சீருடை வழங்கும் திட்டம்

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ மாணவியருக்கு இலவச சீருடை வழங்கும் திட்டம் சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஒரு வருடத்திற்கு நான்கு இணை விலையில்லா சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

xv. அரசு பணிபுரியும் மகளிர் விடுதி

வெளியூரில் பணிக்கு செல்லும் மகளிர்க்கு குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான உறைவிட வசதிகள் செய்து தரும் வகையில் சமூகநலத்துறையின் மூலம் சென்னையில் இரண்டு, கடலூர், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, தருமபுரி மற்றும் தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் தலா ஒன்றும் என மொத்தம் 8 பணிப்புரியும் மகளிர் விடுதிகள் செயல்பட்டுவருகின்றன. மேலும் கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், வேலூர், திருவள்ளூர், விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் தலா ஒரு விடுதியும், சென்னையில் 6 விடுதியும், காஞ்சிபுரத்தில் 2 விடுதியும் ஆக மொத்தம் 28 பணிப்புரியும் பெண்களுக்கான அரசு விடுதிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளது.

xvi.One Stop Centre(OSC)

பெண்களுக்கு எதிராக பணிப்புரியும் இடங்கள், குடும்பம் மற்றும் சமூதாயத்தின் மூலம் பெண்களுக்கு ஏற்படும் குடும்ப வன்கொடுமை மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகியவற்றால் பாதிக்கப்படும் பெண்கள் அவ்விதமான வன்கொடுமைகளை எதிர்த்து வீட்டை விட்டு வெளியேறும் பெண்களை காப்பாற்றி உடனடியாக பாதுகாத்து அவர்களுக்கு மருத்துவம், சட்டரீதியான ஆலோசனைகள் மற்றும் மனரீதியான ஆலோசனைகள் வழங்கிட ஏதுவாக வழிகாட்டி மையம் One Stop Centre (OSC) தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் துவங்கப்பட்டுள்ளது.

xvii.சமுதாய உதவி மையம்

பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொது மக்களிடமிருந்து வரப்பெறும் புகார் மனுக்களை பெற்று தகுந்த நடவடிக்கை எடுத்து பயன் பெறும் வகையில் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமுதாய உதவி மையம் Skype உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

முகவரி

மாவட்ட சமூகநல அலுவலகம்,
43, காந்தி நகர் 2வது தெரு,
காஞ்சிபுரம் மாவட்டம்.
தொலைபேசி – 044-27239334
மின்னஞ்சல் –dswokanchi[at]gmail[dot]com