மூடு

நிலஅளவை பதிவேடுகள் துறை

டிஜிட்டல் இந்தியா நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டம் (DILRMP)

இத்திட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. இதன் முக்கிய நோக்கம், நில ஆவணங்களை நிர்வகிப்பதில் நவீன, துல்லியமான வெளிப்படை தன்மையை உருவாக்குவதாகும். இதனால் மாவட்டத்தின் நில உரிமை முறையை முறைப்படுத்தி இறுதி செய்வதாகும்,

(DILRMP) என்ற இத்திட்டத்தின் நான்கு முக்கிய பணிகள் வருமாறு

 1. நில ஆவண மேலாண்மை மையங்கள் உருவாக்குதல் (LRMC)
 2. 2) நில ஆவணங்களை கணினிமயமாக்குதல்
  • நத்தம் மற்றும் நகர தரவுகளை பதிவேற்றுதல்.
  • புலப்படங்களை கணினிபடுத்துதல்
 3. நில ஆவணங்களை இணைய செயலிகளால் நிர்வகித்தல்
 4. DGPS / RTK என்ற கருவிகளை கொண்டு தொடர்ச்சியாக இயங்கும் குறிப்பறியும் கருவிபொருத்தி (CORS) நவீன நில அளவை மேற்கொள்ளுதல்.

இப்போது வரை – இலக்குகளை அடைந்தது

 • “தமிழ் நிலம்” என்ற மென்பொருள் கொண்டு ‘அ‘ பதிவேடுகள் மற்றும் சிட்டா அடங்கல் ஆகியவற்றை வெற்றிகரமாக இணையவழி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பெற்றது.
 • 8 வட்ட அலுவலகங்களில் நில ஆவண மையங்கள் நிறுவியது. மேலும் 5 வட்டங்களில் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது.
 • அனைத்து நத்தம் மற்றும் நகர நில ஆவணங்களை கணினிமயமாக்கி அதனை இணைய வழி சேவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
 • இதுவரை கணினிப்படுத்தப்பட்ட அனைத்து புலப்படங்களும் 13 வட்ட அலுவலக சர்வர்களில் பதிவேற்றம் செய்தது. அதனை தேசிய தகவல் ஆணையத்தின் மத்திய பெருங்கணினியை உட்புகுத்தி ஆளுகைக்கு உட்படுத்தியது.
 • இணைய மென்பொருளை பயன்படுத்தி இணைய வழி பட்டா மாறுதல் (OPT) முறையை செயல் முறைக்கு கொண்டு வந்தது. அதனை நெருக்கமாக கண்காணித்து வருவது.
 • தொடர்ச்சியாக இயங்கும் குறிப்பறியும் இயந்திரம் (CORS) நிலையங்கள் மாவட்டத்தின் 3 இடங்களில் நிறுவியது. (காஞ்சிபுரம், திருப்போரூர், செய்யூர்) அதனைக் கொண்டு, நவீன கருவிகளான DGPS / RTK நில அளவையை மேற்கொள்ள இருப்பது. திருப்பெரும்புதூர் வட்டம் சிறுகளத்தூர் மாதிரி கிராமத்தில் பணி மேற்கொள்ளப்படுகின்றது.
 • இணைய வழி நில ஆவண மேலாண்மை மற்றும் பட்டா மாறுதல் நடவடிக்கைகளை திறம்பட கையாள அனைத்து வட்ட துணை ஆய்வாளர்களுக்கும், குறுவட்ட அளவர்களுக்கும் மடிக்கணினி வழங்கியது.
 • கிராம வரைபடங்களை கணினி வரைவு செய்தல் பணி நடைபெறுகின்றது.
 • அலுவலக முகவரி
  உதவி இயக்குநர் / மாவட்ட ஆட்சியரின்
  நேர்முக உதவியாளர் (நிலஅளவை)
  மாவட்ட நிலஅளவை அலுவலகம்,
  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
  காஞ்சிபுரம் மாவட்டம்.
  தொலைபேசி : 044-27238146
  மின்னஞ்சல் : adsurvey[dot]tnkpm[at]nic[dot]in