ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
காஞ்சிபுரம் மாவட்டம் –
திட்டத்தின் விவரங்கள்
முகவுரை:
ஆதிதிராவிடர் மக்கள் பொரும்பாலானோர் பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகத்தின் விளம்பில் உள்ளனர். அதிகமான குடும்பங்கள் வசதி வாய்ப்புகள் இன்றி உள்ளதோடு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வருவாய் ஈட்டும் வழிகளில் பல திட்டங்கள் வகைப்படுத்தப்பட்டு வருகிறது. அதிகமாக குடும்பங்கள் வசதி வாய்ப்புகள் இன்றி உள்ளதோடு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் ஏனைய வருவாய் ஈட்டும் வழிகளில் அவர்களின் நுழைவுயரிமை ஒரு வரம்பிற்குள்ளேயே உள்ளது.
திட்டங்கள் பற்றிய விளக்கம்
வ.எண். | பள்ளி மற்றும் விடுதிகளின் வகைப்பாடு | எண்ணிக்கை | மாணாக்கர்களின் எண்ணிக்கை |
---|---|---|---|
1 | அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் | 95 | 12639 |
2 | அரசு ஆதிதிராவிடர் நல விடுதிகள் | 47 | 2509 |
திட்டங்கள் பற்றிய விளக்கம்
கல்வி
சமூக அளவிலும் பொருளாதார அளவிலும் பின்தங்கிய ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ இனத்தை சார்ந்தவர்களை சமூக, பொருளாதார முன்னேற்றமடைய செய்ய சிறந்த வழி அவர்களுக்கு உரிய கல்வியளித்து அவர்களை சுயசார்புடையவர்களாக மாற்ற வேண்டும் என்ற உயரிய நோக்குடன் இப்பிரிவினைச் சார்ந்த மாணாக்கர்களுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் முதுநிலை ஆராய்ச்சி மற்றும் முனைவர் பட்டப்படிப்பு வரை பல்வேறு கல்வி உதவித்தொகைத் திட்டங்கள் ஆதிதிராவிடர் நலத்துறை செயலல்படுத்திவருகிறது.
திட்டத்தின் பெயர் | திட்டம் பற்றிய விளக்கம் | திட்டத்தின் பயனை பெறுவதற்கான தகுதி | திட்டத்தின் பயனை பெறுவதற்கான நடைமுறைகள் |
---|---|---|---|
போஸ்ட் மெட்ரிக் மைய அரசு கல்வி உதவித் தொகை திட்டம் | அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லுரிகளுக்கு மாணாக்கர்கள் செலுத்த வேண்டிய கட்டாயக் கட்டணங்கள் மற்றும் பராமரிப்புத் தொகை ஆகியவை கல்வி உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. பராமரிப்பு படிகள். 1. வெளியில் தங்கிப்பயில்பவர் மாதம் ரூ.230/- முதல் 550/- வரை 2. விடுதியில் தங்கிப்படிப்பவர் மாதம் ரூ.380/- முதல் 1200/- வரை |
11ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படிக்கும் மாணாக்கர்களுக்கு பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூ.250 இலட்சம் (அனைத்து வகை வருமானமும் சேர்த்து கணக்கிடப்படும்) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்களுக்கு மட்டும். |
பள்ளித்தலைமை ஆசிரியர்கள், கல்லுரி முதல்வர்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். |
சுகாதாரமற்ற தொழிலில் பணிபுரிவோரின் குழந்தைகளுக்கு 10 ஆம் வகுப்பு வரை படிப்பதற்கான மைய அரசின் உதவித் தொகை திட்டம் | (அ) வெளியில் தங்கிப்படிப்பவர் பராமரிப்புப்படி: ஒன்றாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை வருடம் ரூ.1100/- சிறப்பு மானியம் வருடம் ரூ.750/- (ஆ) விடுதியில் தங்கிப்பயில்பவர்கள் பராமரிப்புப்படி: மூன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை வருடம் ரூ.700/- சிறப்பு மானியம் வருடம் ரூ.1000/- |
துப்புரவுத் தொழில் செய்வோர், குப்பை பொறுக்குவோர், தோல் உரிப்பவர், தோல் பதனிடும் தொழில் புரிவோரின் குழந்தைகள். வருமான வரம்பு இல்லை. சாதி மற்றும் மதம் தடையில்லை |
பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் விண்ணப்பித்து ஆன்லைன் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழஙகுடியினர் நல அலுவலரால் பரிந்துரை செய்யப்பட வேண்டும் |
ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்களுக்கு கல்வி உதவித்தொகை திட்டம் | அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை (அ) வெளியில் தங்கிப்படிப்பவர்கள் பராமரிப்புபடி ரூ.150X10 மாதங்கள் ரூ. 1500 சிறப்பு மானியம் ரூ. 750 மொத்தம் ரூ. 2250 (ஆ) விடுதியில் தங்கி பயில்பவர்களுக் மாதம் ஒன்றுக்கு பராமரிப்புப்படி ரூ.350/- ரூ.350×10 மாதங்கள் ரூ. 3500 சிறப்பு மானியம் ரூ. 1000 மொத்தம் ரூ. 4500 |
பெற்றோர்/பாதுகாவலர் ஆண்டு வருமான வரம்பு ரூ.2 இலட்சம் ஆதிதிராவிடர்/பழங்குடியினர் மாணாக்கர்களுக்கு மட்டும். |
பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் விண்ணப்பித்து ஆன்லைன் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழஙகுடியினர் நல அலுவலரால் பரிந்துரை செய்யப்பட வேண்டும் |
உயர்கல்வி சிறப்பு உதவித்தொகை | அ.பட்டப்படிப்பு, பாலிடெக்னிக் படிப்பிற்கு வருடம்ரூ.7500/-மும். ஆ. முதுகலை பட்டப்படிப்பு, தொழில்நுட்ப பட்டப்படிப்பிற்கு வரும் ரூ.8000/-மும் வழங்கப்படும். |
கல்வி நிலைய விடுதிகளில் தங்கிப்பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறித்துவ மாணாக்கர்களுக்கு ஆண்டு வருமானம் வரம்பு ரூ.2 இலட்சம் வரை. அரசு மற்றும் தனியார் கல்லுரி விடுதிகளில் தங்கிப்பயில்பவர்கள். |
கல்லுரி முதல்வர்கள் மூலம் விண்ணப்பித்து, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரால் பரிந்துரை செய்யப்பட வேண்டும். |
திட்டத்தின் பெயர் | திட்டம் பற்றிய விளக்கம். | திட்டத்தின் பயனை பெறுவதற்கான தகுதி | திட்டத்தின் பயனை பெறுவதற்கான நடைமுறைகள் |
---|---|---|---|
சிறப்புக்கட்டணச் சலுகை | ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளுக்கு மட்டும். | வருமான வரம்பு இல்லை. ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு | தலைமை ஆசிரியர் மூலமாக விண்ணப்பித்து மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரால் பரிந்துரை செய்யப்பட வேண்டும். |
தேர்வுக்கட்டணம், விண்ணப்பக்கட்டணம், பதிவுக்கட்டணச்சலுகைகள் | அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுரிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் தொழிற்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு தேர்வு கட்டணம், விண்ணப்பக்கட்டணம் மற்றும் பதிவு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது. அதே போல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது. | 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதத்திற்கு மாறிய ஆதிதிராவிடர் இன மாணாக்கர்களாக இருக்க வேண்டும். வருமான வரம்பு இல்லை. |
விண்ணப்பக்கட்டணம் மற்றும் பதிவுக்கட்டணத்தைப் பெற கல்வி நிறுவனங்கள் பரிந்துரை செய்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரால் கருத்துரு சமர்ப்பிக்க வேண்டும். |
தேர்வுக்கட்டணம், விண்ணப்பக்கட்டணம், பதிவுக்கட்டணச்சலுகைகள் | அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுரிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் தொழிற்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு தேர்வு கட்டணம், விண்ணப்பக்கட்டணம் மற்றும் பதிவு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது. அதே போல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது. | 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதத்திற்கு மாறிய ஆதிதிராவிடர் இன மாணாக்கர்களாக இருக்க வேண்டும். வருமான வரம்பு இல்லை. |
விண்ணப்பக்கட்டணம் மற்றும் பதிவுக்கட்டணத்தைப் பெற கல்வி நிறுவனங்கள் பரிந்துரை செய்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரால் கருத்துரு சமர்ப்பிக்க வேண்டும். |
சிறந்த தனியார் பள்ளிகளில் மாணாக்கர்களை 11ஆம் வகுப்பில் சேர்த்தல் | 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறந்து விளங்கும் அனைத்து வகையான அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று மாவட்ட தோறும் சிறந்து விளங்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்கள். | 1.பெற்றோர்களின் அல்லது பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூ.1 இலட்சம் வரை. | மாணவ/மாணவியர்களை தேர்வு செய்யப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் ஒப்புதல் பெற்று தனியார் பள்ளிகளில் பயில வைத்தல். |
சிறந்த தனியார் பள்ளிகளில் மாணாக்கர்களை 6 ஆம் வகுப்பில் சேர்த்தல் | அனைத்து வகையான அரசு, அரசு உதவி பெறும், மாநகராட்சி, நகராட்சி, ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள், அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப்பள்ளிகளில் சிறப்புப் பெறற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்களை வட்டார அளவில் நடத்திய தனித்தேர்வில் சிறந்து விளங்கிய ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ மாணாக்கர்கள் | வருமான வரம்பு இல்லை. | மாணவ/மாணவியர்களை தேர்வு செய்யப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் ஒப்புதல் பெற்று தனியார் பள்ளிகளில் பயில வைத்தல். |
திட்டத்தின் பெயர் | திட்டம் பற்றிய விளக்கம் | திட்டத்தின் பயனை பெறுவதற்கான தகுதி | திட்டத்தின் பயனை பெறுவதற்கான நடைமுறைகள் |
---|---|---|---|
முதலமைச்சர் தகுதி பரிசுத் தொகைத் திட்டம். (தமிழ் மொழியை ஒரு பாடமாகக் கொண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் சிறந்து விளங்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ மாணாக்கர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.) | பன்னிரெண்டாம் வகுப்பில் சிறந்து விளங்கும் 1000 சிறந்த மாணாவர்கள் மற்றும் 1000 சிறந்த மாணவியர்கள் மேல்படிப்பு பயில வருடந்தோறும் பரிசுத் தொகையாக ரூ.3000/- வீதம் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். | ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ மாணாக்கர்கள். வருமான வரம்பு இல்லை. |
கல்வி நிலைய தலைவர்கள் மூலமாக விண்ணப்பித்து பரிந்துரை செய்யப்பட வேண்டும். மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரால் பரிந்துரை செய்யப்பட வேண்டும். |
மாநில அளவில் 10 ஆம் வகுப்பில் சிறந்து விளங்கும் 5 மாணாக்கர்கள். | ரூ.1000/- வீதம் பரிசுத் தொகை வழங்கப்படும். ஒவ்வோர் இனத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் அல்லது ஒரு மாணவிக்கு . |
ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறித்துவ மாணாக்கர்கள். மாநில அளவில் 10 ஆம் வகுப்பில் பாடத்தில் சிறந்த மாணாக்கராக இருக்க வேண்டும். வருமான வரம்பு இல்லை |
மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மூலமாக இயக்குநர், ஆதிதிராவிடர் நலத்துறை, சென்னைக்கு பரிந்துரை செய்யப்பட வேண்டும்.. |
மாவட்ட அளவிலான பரிசுத் தொகை (12ம் வகுப்பு) | ரூ.6000/-, ரூ.4000/-, ரூ.2000/- பன்னிரெண்டாம் வகுப்பில் மாவட்ட அளவில் தேர்ச்சி பெறும் சிறந்த மாணாக்கர்களுக்கு |
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவர் ஆகியோர் ஒருங்கிணைந்து. வருமான வரம்பு இல்லை. |
மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மூலமாக இயக்குநர், ஆதிதிராவிடர் நலத்துறை, சென்னைக்கு பரிந்துரை செய்யப்பட வேண்டும்.. |
திட்டத்தின் பெயர் | திட்டம் பற்றிய விளக்கம் | திட்டத்தின் பயனை பெறுவதற்கான தகுதி | திட்டத்தின் பயனை பெறுவதற்கான நடைமுறைகள் |
---|---|---|---|
3 ஆம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.500/- வழங்கப்படுகிறது. | இத்தொகை மாணவிகளுடைய தாய்மார்களின் அஞ்சலக சேமிப்புக் கணக்கில் மாணவியர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். | ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பெண்குழந்தைகள் மட்டும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகள். வருமான வரம்பு இல்லை. |
தலைமை ஆசிரியர் மூலமாக விண்ணப்பித்து மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரால் பரிந்துரை செய்யப்பட வேண்டும். |
6 ஆம் வகுப்பு பயில்பவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.1000/- வழங்கப்படுகிறது.. | இத்தொகை மாணவிகளுடைய தாய்மார்களின் அஞ்சலக சேமிப்புக் கணக்கில் மாணவியர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். | ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பெண்குழந்தைகள் மட்டும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகள். வருமான வரம்பு இல்லை. |
தலைமை ஆசிரியர் மூலமாக விண்ணப்பித்து மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரால் பரிந்துரை செய்யப்பட வேண்டும். |
7 மற்றும் 8 ஆம் வகுப்புப் பயில்பவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.1500/- வழங்கப்படுகிறது. | இத்தொகை மாணவிகளுடைய தாய்மார்களின் அஞ்சலக சேமிப்புக் கணக்கில் மாணவியர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். | ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பெண்குழந்தைகள் மட்டும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகள். வருமான வரம்பு இல்லை. |
தலைமை ஆசிரியர் மூலமாக விண்ணப்பித்து மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரால் பரிந்துரை செய்யப்பட வேண்டும். |
திட்டத்தின் பெயர் | திட்டம் பற்றிய விளக்கம் | திட்டத்தின் பயனை பெறுவதற்கான தகுதி | திட்டத்தின் பயனை பெறுவதற்கான நடைமுறைகள் |
---|---|---|---|
பாடப்புத்தகங்கள் | ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்குதல் | 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் மற்றும் பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் மாணாக்கர்கள் வழங்கப் படுகிறது. | பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக . |
குறிப்பேடுகள் | ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணாக்கர்களுக்கு வழங்குதல். | 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் மற்றும் பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் மாணாக்கர்கள் வழங்கப் படுகிறது. | பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக . |
சீருடைகள் | ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணாக்கர்களுக்கு வழங்குதல். | 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் மற்றும் பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் மாணாக்கர்களுக்கு வழங்கப் படுகிறது. | பள்ளி தலைமை ஆசிரியர்கள், விடுதிக் காப்பாளர்கள் மூலமாக . |
மிதிவண்டிகள் | 11ம் வகுப்பில் பயிலும் மாணாக்கர்கள். | அரசு, அரசு உதவி பெறும், அரசு உதவி பகுதியாக பெறும் (சுயநிதி) பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு வழங்கப்படுகிறது. | பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக. |
சிறப்பு வழிகாட்டி மற்றும் வினா வங்கி | 10 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள். | ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள். அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகள். ஆதிதிராவிடர் நல விடுதிகள் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் தங்கி பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கப்படுகிறது. |
பள்ளி தலைமை ஆசிரியர்கள், விடுதிக் காப்பாளர்கள் மூலமாக . |
பாய் மற்றும் போர்வை. | விடுதிகளில் தங்கிப்பயிலும் அனைத்து மாணவ/மாணவிகளுக்கும் (பாய்- ஆண்டு தோறும், போர்வை- இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை) | ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ மாணாக்கர்கள். | விடுதி காப்பாளர்/ காப்பாளினிகள் மூலமாக. |
இதர செலவினம் | சோப்பு, எண்ணெய் போன்ற பல்வகைச் செலவினத்திற்கு Rs. 50 or Rs.75 | ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ மாணாக்கர்கள். | விடுதி காப்பாளர்/ காப்பாளினிகள் மூலமாக. |
திட்டத்தின் பெயர் | திட்டம் பற்றிய விளக்கம் | திட்டத்தின் பயனை பெறுவதற்கான தகுதி | திட்டத்தின் பயனை பெறுவதற்கான நடைமுறைகள் |
---|---|---|---|
நல்லிணக்கத்துடன் வாழும் கிராமங்களைத் தேர்வு செய்து பரிசு வழங்குதல். மாவட்டந்தோறும் (சென்னை நீங்கலாக) | இன நல்லிணக்கத்துடன் வாழும் கிராமம் ஒன்றினை தேர்வு செய்து ரூ. 10 இலட்சம் பரிசு வழங்குதல் | இன நல்லிணக்கத்துடன் வாழும் கிராமம் | மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் |
திட்டத்தின் பெயர் | திட்டம் பற்றிய விளக்கம் | திட்டத்தின் பயனை பெறுவதற்கான தகுதி | திட்டத்தின் பயனை பெறுவதற்கான நடைமுறைகள் |
---|---|---|---|
இணைப்புச் சாலைகள் அமைத்தல் | பழங்குடியினர் குடியிருப்புகளை முக்கிய கிராமத்துடன் அல்லது சமவெளியுடன் இணைத்தல் | தற்பொழுது சாலை வசதி இல்லாத கிராமம் | அலுவலர், ஊராட்சி ஒன்றிய கண்காணிப்பு பொறியாளர், தேசிய நெடுஞ்சாலைத்துறை மாவட்ட ஆட்சியர். |
இலவசமாக வீடுகள் கட்டித்தருதல் | மலைப்பகுதி சமவெளிப்பகுதிகளில் வாழும் வீடு இல்லாதவர்களுக்கு வீடுகள் கட்டித்தருதல் | வீட்டுமனைப்பட்டா உள்ள பழங்குடியினர் | சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்.மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஊராட்சி ஒன்றிய அலுவலர் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் |
திட்டத்தின் பெயர் | திட்டம் பற்றிய விளக்கம் | திட்டத்தின் பயனை பெறுவதற்கான தகுதி | திட்டத்தின் பயனை பெறுவதற்கான நடைமுறைகள் |
---|---|---|---|
அழிவின் விளிம்பிலுள்ள பழங்குடியினர் மேம்பாடு (PVTG) | அழிவின் விளிம்பிலுள்ள பழங்குடியின மக்களுக்கென்று (i) பாரம்பரிய வீடுகள் கட்டுதல் (ii) கறவை மாடுகள் வழங்குதல் (iii) குடிநீர் வசதி மற்றும் பாரம்பரிய வீடுகள் கட்டுதல் (iv) தெரு விளக்குகள் அமைத்தல் போன்ற வசதிகள் செய்யப்படுகின்றன. |
பழங்குடியினராக இருக்க வேண்டும் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்க வேண்டும். |
மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மூலமாகவோ அல்லது துறைத்தலைவர் மூலமாகவோ முன்மொழிவுகள் வரப்பெற வேண்டும். |
பழங்குடியினர் துணைத்திட்டத்திற்கான சிறப்பு மைய நிதியுதவி | பழங்குடியின குழுக்களுக்கு கறவை மாடுகள் வழங்கப்படுவதுடன், சில பொருளாதார திட்டங்களும் வழங்கப்படுகின்றன. | பழங்குடியினராக இருக்க வேண்டும் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்க வேண்டும்.கறவை மாடுகள் வாங்குவதற்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு மட்டுமே லை விநியோகம் செய்வோம் என்ற உறுதிமொழி பெற்ற குழுவாக இருக்க வேண்டும் |
மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மூலமாகவோ அல்லது துறைத்தலைவர் மூலமாகவோ முன்மொழிவுகள் வரப்பெற வேண்டும். |
பெயர் மற்றும் பதவி | தொடர்பு எண் | மின் அஞ்சல் | முகவரி |
---|---|---|---|
மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் காஞ்சிபுரம் |
044 – 27236655 கைப்பேசி எண் 7338801259 |
dadwkp[at]nic[dot]in | மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காஞ்சிபுரம். |
தனி வட்டாட்சியர் (ஆதிந) காஞ்சிபுரம் | — | stadwkp[at]gmail[dot]com | தனி வட்டாட்சியர் (ஆதிந) அலுவலகம், வட்டாட்சியர் அலுவலக வளாகம் காஞ்சிபுரம் |
தனி வட்டாட்சியர் (ஆதிந) திருப்பெரும்புதுர் | — | sprtahr2016[at]gmail[dot]com | தனி வட்டாட்சியர் (ஆதிந) அலுவலகம், வட்டாட்சியர் அலுவலக வளாகம் திருப்பெரும்புதுர் |
தனி வட்டாட்சியர் (ஆதிந) செங்கல்பட்டு | — | stadwcgt[at]gmail[dot]com | தனி வட்டாட்சியர் (ஆதிந) அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலக வளாகம் செங்கல்பட்டு |
தனி வட்டாட்சியர் (ஆதிந) மதுராந்தகம் | — | spladwmkm2017[at]gmail[dot]com | தனி வட்டாட்சியர் (ஆதிந) அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலக வளாகம் மதுராந்தகம். |