மூடு

தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம்

அறிமுகம்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குழந்தைத்  தொழிலாளர் முறையை முற்றிலும் நீக்குதல் மற்றும் குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் காஞ்சி தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட சங்கமானது  2002 ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நிறுவப்பட்டது. காஞ்சி தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட சங்கம் 2004 ஆம் ஆண்டு முதல் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தை (என்.சி.எல்.பி) செயல்படுத்தி வருகிறது.

குழந்தைத் தொழிலாளர் குறித்த சர்வே மற்றும் சிறப்பு பயிற்சி மையங்களின் விவரங்களின் நிலை:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர் குறித்த கணக்கெடுப்பை புது தில்லியை சார்ந்த , டி.என்.எஸ் மோட் இந்தியா என்ற நிறுவனமானது 2003ஆம் ஆண்டு நடத்தியது.

டி.என்.எஸ் மோட் இந்தியா சர்வே விவரங்கள்

5-8 வயது                       ..     51

9-13 வயது                     .. 2843

மொத்தம்                      ..  2894

இக்கணக்கெடுப்பின்படி 2004 ஆம் ஆண்டில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 3000 குழந்தைத் தொழிலாளர்களுக்காக 60 சிறப்பு பயிற்சி மையங்களை துவங்க அனுமதி அளித்தது. இதுவரை மொத்தம் 6360 குழந்தைத் தொழிலாளர்கள் அடையாளம் காணப்பட்டு 60 சிறப்பு பயிற்சி மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். சிறப்பு பயிற்சி மைய குழந்தைகளை முறைசார் பள்ளியில் சோ்த்தல் மற்றும் குழந்தைகளின் குடும்பங்கள் இடம்பெயர்வு காரணமாக 60 சிறப்பு பயிற்சி மையங்களானது குறைக்கப்பட்டு 28 சிறப்பு பயிற்சி மையங்கள் தற்போது காஞ்சி தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட சங்கத்தால் நடத்தப்பட்டு இச்சிறப்பு பயிற்சி மையங்களில் 628 குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்ட குழந்தைகள் கல்வி பயிற்று வருகின்றனர்.

மாணவர்கள்  / மாணவிகள்/ மொத்தம்

326              /           302         /           628

 

சாதி மொத்தம்
ஆதிதிராவிடரர் 237
பழங்குடியினர் 253
பிற்படுத்தப்பட்டோர் 138
மொத்தம் 628

வருடவாரியாக சிறப்பு பயிற்சி மையங்களில் குழந்தைகள் சேர்க்கை விவரங்கள்

பதிவுசெய்யப்பட்ட மொத்த குழந்தைகளின் எண்ணிக்கை
ஆண்டு ஆண் பெண் மொத்தம்
2005- 06 874 920 1794
2006– 07 165 141 306
2007– 08 293 198 491
2008– 09 216 190 406
2009- 10 239 178 417
2010- 11 159 158 317
2011- 12 174 122 296
2012- 13 165 148 313
2013-14 176 152 328
2014-15 96 115 211
2015-16 150 131 281
2016-17 137 108 245
2017-18 175 132 307
2018-19 155 110 265
2019-20 154 137 291
2020-21 42 50 92
மொத்தம் 3370 2990 6360

 

வருடவாரியாக முறைசார் பள்ளியில் சோ்க்கப்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை
ஆண்டு ஆண் பெண் மொத்தம்
2005- 06 105 75 180
2006– 07 285 301 586
2007– 08 244 239 483
2008– 09 68 70 138
2009- 10 74 51 125
2010- 11 100 95 195
2011- 12 87 73 160
2012- 13 79 51 130
2013-14 71 75 146
2014-15 89 89 178
2015-16 96 75 171
2016-17 76 74 150
2017-18 108 74 182
2018-19 175 122 297
2019-20 212 168 380
2020-21 109 73 182
மொத்தம் 1978 1705 3683

பாடப்புத்தகங்கள், சீருடை, விளையாட்டு மற்றும் விளையாட்டு பொருட்கள் போன்றவை வழங்குதல் :

 சிறப்பு பயிற்சி மையத்தில் 1 முதல் 7  வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு தமிழக அரசின் இலவச பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், வடிவியல் பெட்டி, காலணிகள், செஸ் போர்டு, அட்லஸ், 4 செட் சீருடை, புத்தக பை, கலர் பென்சில், கிரேயன்கள் ஆகியவை  மாவட்ட கல்வித் துறையால் வழங்கப்பட்டு வருகின்றன.

பணிபுரியும் பணியாளர்கள் விவரம்:

பதவி எண்ணிக்கை
திட்ட இயக்குனர் 1
திட்ட மேலாளர் 2
அலுவலக எழுத்தர் மற்றும் கணக்காளர் 1
தட்டச்சர் 1
அலுவலக உதவியாளர் 1
சிறப்பு பயிற்சி மைய பதிவேட்டு பராமரிப்பாளர் 12
சிறப்பு பயிற்சி மைய ஆசிரியர்கள் 33
தொழில் கல்வி பயிற்சியாளர்கள் 9
சிறப்பு பயிற்சி மைய உதவியாளர்கள் 28
மொத்தம் 88

குழந்தைகளின் ஆரோக்கிய பராமரிப்பு:

ஆரம்ப சுகாதார மையத்தால் அருகிலுள்ள அனைத்து சிறப்பு பயிற்சி மையங்களிலும் பயிலும் குழந்தைகளுக்கு  மாதத்திற்கு ஒரு முறை சுகாதார மற்றும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் குழந்தைத் தொழிலாளாகளாக இருந்து பணிபுரிந்த காலத்தில் உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து கண்காணிக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான வைட்டமின் மாத்திரைகள் மற்றும் மருத்துவம் வழங்கப்படுகின்றன.

ஒரு குறிப்பிட்ட குழந்தைக்கு அவசரகால மருத்துவ பராமரிப்பு தேவைப்படும்போது, ​​என்.சி.எல்.பி ஊழியர்கள் குழந்தையை அரசு ஆரம்ப சுகாதார மையத்திற்கோ அல்லது தலைமை மருத்துவனைக்கு அழைத்துச் சென்று அக்குழந்தைக்கு தேவையான சிகிச்சையைப் பெறுகிறார்கள்.

மதிய உணவு :

சிறப்பு பயிற்சி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு சமூக நலத்துறை மூலம் அருகில் உள்ள முறைசார் பள்ளியில் இருந்து  சமைத்த மதிய உணவு வழங்கப்படுகிறது.  கொரோனா பெருந்தொற்றின் காரணமாக தற்சமயம் முட்டை மற்றும் உலர் தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

உதவித்தொகை:

இக்குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்ட குழந்தைகள் சிறப்பு பயிற்சி மையங்களில் சோ்த்த பின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வழங்கியுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி 60% வருகைபதிவேடு உள்ள குழந்தைகளுக்கு ரூ.400/- தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் அக்குழந்தைகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.  இந்த ஊக்கத்தொகையானது இக்குழந்தைகள் முறைசார் பள்ளியில் சேர்க்கப்படும்போது அவர்களுக்கு வழங்கப்படும்.

தொழிற்கல்வி:

தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தில் பயிலும் குழந்தைகளுக்கு கீழ்கண்ட தொழிற்கல்வி பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இது சிறப்பு பயிற்சி மையங்களில் பயிலும் குழந்தைகளின் படைப்பாற்றலையும் அவர்களின் எதிர்கால வேலைவாய்ப்பையும் மேம்படுத்துகிறது.

  • மென்மையான பொம்மை தயாரித்தல்
  • கம்பளி பின்னல்
  • எம்பிராய்டரிங்
  • வயர் பைகள்
  • காகிதப்பை
  • மலர்கள் தயாரித்தல்
  • சில்க் கார்லண்ட் தயாரித்தல்

முறைசார் பள்ளியில் சோ்க்கப்பட்ட குழந்தைகளை தொடர்ந்து கண்காணித்தல்:

சமகர சிக்சா  அபியான் திட்டத்தில் பணிபுரியும் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தில் பணிபுரியும்  திட்ட மேலாளர்கள், மற்றும் சிறப்பு பயிற்சி மைய ஆசிரியர்கள் மூலம் முறைசார் பள்ளியில் பயிலும் குழந்தைகள் இடைநிற்றல் இல்லாமல் தொடர்ந்து கல்வி பயிலும் வகையில் இக்குழந்தைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படடு வருகின்றனர்.

2020-21 ஆம் ஆண்டில், குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டு தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்பு பயிற்சி மையத்தில் பயின்று பின்னர் முறைசார் பள்ளியில் கல்வி பயின்று உயர்கல்வி  பயின்ற 54 குழந்தைகளுக்கு தமிழக அரசிடமிருந்து தலா ரூ.6000/- (மாதத்திற்கு ரூ.500/-) கல்வி உதவித்தொகை பெறப்பட்டு வழங்கப்பட்டது.

குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வழங்கப்பட்டு வருகின்றன.  பொதுமக்களிடையே  விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து அரசு அலுவலகங்கள், பஞ்சாயத்து யூனியன் கட்டிடங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டுளளன.  மேலும் குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஊரவலங்கள் மற்றும் கையெழுத்து இயக்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அனைத்து கிராமசபைக் கூட்டங்களிலும், குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுதல் குறித்த விவாதப் பொருள் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ளது. கிராமசபைக் கூட்டங்களின் போது, ​​குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுதல் குறித்தும் அவர்களை கண்டறிந்து மீட்டு பள்ளியில் அல்லது சிறப்பு பயிற்சி மையங்களில் குழந்தைகளை சேர்ப்பது குறித்து பொதுமக்களுக்கு அறிவூட்டப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சிறப்பு பயிற்சி மையங்களில் பயிலும் குழந்தைகளின் குடும்பங்களுக்கு மைக்ரோ பைனான்ஸ் ஏற்பாடு செய்துகொடுத்து அவர்கள் சுயதொழில் தொடங்க அரசு அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து உதவி வருகின்றன.

சிறப்பு பயிற்சி மையங்களில் பயிலும் குழந்தைகளின் அனைத்து அடிப்படை தரவுகளும் ஒவ்வொரு மாதமும் பென்சில் இணையதள செயலியில் (www.pencil.gov.in)  பதிவேற்றப்படுகின்றன. எனவே இத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம். புது தில்லி கண்காணித்து வருகிறது. குழந்தைத் தொழிலாளர்கள் குறித்த புகார்களும் இந்த இணையதளத்தில்  பொதுமக்கள் பதிவு செய்யவும் ஏற்ற வகையில் இந்த இணையதளமானது அமைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளிடையே தொழிலாளர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெண்கள் மற்றும் ஆண்கள் சுய உதவிக்குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. உலக மகளிர் தினம் மற்றும் சூன் 12 குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தின் போதும் அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான உறுதிமொழி எடுத்து வருகின்றனர்.

அனைத்து பஞ்சாயத்துகளிலும் குழந்தைத் தொழிலாளர்களை ஒழிப்பதில் கிராமசபைக் கூட்டங்கள் மற்றும் ‘நமத்து கிராமம்’ போன்ற சிறப்புத் திட்டங்கள் மூலம் சமூக பங்களிப்பை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகத்தால் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

கோவிட் – 19 தொற்று கால நடவடிக்கைகள்

மாவட்ட சமூக நலத்துறையின் உதவியுடன், 28 சிறப்பு பயிற்சி மையங்களில் பயிலும்  அனைத்து குழந்தைகளுக்கும் வாரத்திற்கு ஒரு முறை முட்டை மற்றும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

COVID-19 பாதிப்பை தடுக்கவும் தொற்று பரவாமல் காக்கவும்  எஸ்.டி.சி குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரால் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அந்தந்த பகுதிகளில் நடைபெற்ற கூட்டங்களில் என்.சி.எல்.பி ஊழியர்களால் விளக்கப்பட்டு வருகின்றன.

மாவட்ட ஆட்சியர் / தலைவர் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் அவர்களின் அறிவுறுத்தலின்படி, என்.சி.எல்.பி ஊழியர்களால் எஸ்.டி.சி குழந்தைகளின் குடியிருப்புகளுக்கு அடிக்கடி சென்று, கோவிட் -19 காலகட்டத்தில் அவர்களின் பொது சுகாதாரம் மற்றும் சுகாதார அபாயங்களைத் தடுப்பதை உறுதி செய்கின்றனர். COVID-19 பொது ஊரடங்கு முடியும் காலம் முடியும் வரை இந்த நடவடிக்கைகள் தொடரும்.

என்.சி.எல்.பி ஊழியர்கள் தினசரி எஸ்.டி.சி குழந்தைகளின் குடியிருப்பு இடங்களுக்கு சென்று அந்த குழந்தைகள் மீண்டும் குழந்தைத் தொழிலாளர்களாக மாறமல் உள்ளனரா என்பதை உறுதி செய்து வருகின்றனர்.

சமூக விலகலை கடைபிடிப்பதன் முக்கியத்துவம், அடிக்கடி கைகளை கழுவுதல் மற்றும் முககவசம் அணிவது போன்றவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள்.

என்.சி.எல்.பி ஊழியர்கள் எஸ்.டி.சி குழந்தைகள் மற்றும் பெற்றோர்களைச் சந்தித்து, COVID-19 ஊரடங்கு காலத்தில் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அவர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் வேறு எந்த நடவடிக்கைகளிலும் தங்கள் குழந்தைகளை அனுமதிக்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்கள். என்.சி.எல்.பி ஊழியர்களின் அடிக்கடி களப்பணி மேற்கொள்வதன் மூலம் சிறப்பு பயிற்சி மையங்களில் பயிலும் குழந்தைகள் மீண்டும் வேலைக்கு செல்வது தடுக்கப்பட்டு வருகிறது.

தொடர்பு:
தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம்
நெ. 64, வடிவேல் நகர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் பின்புறம்,
காஞ்சிபுரம் – 631 501.
மின்னஞ்சல்: nclp.tnkpm@gmail.com
https://www.facebook.com/nclp.kanchipuramdistrict
தொலைபேசி எண் :  044-27238050