வேலைவாய்ப்பு
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின்கீழ், மாவட்ட ஆட்சியரகம் வளாகம், காஞ்சிபுரத்தில் செயற்பட்டு வருகிறது.
பணிகள்
- வேலைவாய்ப்பற்ற இளைஞா்களின் கல்வித்தகுதியை பதிவு செய்வது.
- பணிக்காலியிடங்கள் பெறப்படும்பொழுது பதிவுதாரா்களை பதிவு மூப்பு அடிப்படையில் பரிந்துரை செய்தல்.
- காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித்தோ்வுகளுக்கான 4000 புத்தகங்களை கொண்ட தன்னார்வ பயிலும் வட்டம் செயல்படுகிறது. இதன் மூலம் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
- வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை திட்டம் செயல்படுத்துதல்.
- சிறிய அளவில் வெள்ளி தோறும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுதல். காலாண்டிற்கு ஒருமுறை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடத்துதல்.
- பல்வேறு வகையான திறன்பயிற்சி குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்துதல்.
- அயல்நாட்டு வேலைவாய்ப்பிற்காக மனுதாரா்களை பதிவு செய்தல்.
பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகள்
பதிவு, புதுப்பித்தல் மற்றும் கூடுதல் கல்வித்தகுதி, பதிவு ஆகியவை 2010 முதல் இணையதளம் வாயிலாக பதிவு செய்யப்படுகிறது.
இணையதள முகவரி http://tnvelaivaaippu[dot]gov[dot]in
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உயிர்பதிவேட்டில் உள்ள 312846 பதிவுதாரா்களில் 160173 பெண் பதிவுதாரா்களும், 4791 மாற்றுத்திறனாளி பதிவுதாரா்களும் உள்ளனா்.
பரிந்துரை
வேலையளிப்பவரால் அறிவிக்கப்படும் பணிக்காலியிடங்கள் பெறப்படும்பொழுது, 1:5 விகிதாச்சாரத்தில் வயது, கல்வித்தகுதி, இனச்சுழற்சி, முன்னுரிமை மற்றும் பதிவு மூப்பு அடிப்படையில் பதிவுதாரா்கள் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றனா்.
அரசாணை தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத்துறை நாள் 11.03.2015ன்படி அறிவிக்கப்படும் பணிக்காலியிடங்கள் யாவும் தினசரி நாளிதழ் மூலமும் வெளியிடப்பட்டு தகுதியுடைய விண்ணப்பதாரா்கள் அப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தும் வேலைவாய்ப்பினை பெறலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தன்னார்வ பயிலும் வட்டம்
போட்டித் தோ்விற்கு தயாராகும் மாணவா்களுக்கு உதவிடும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ”தன்னார்வ பயிலும் வட்டம்” என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இத்தன்னார்வ பயிலும் வட்டத்தில் போட்டித்தோ்வு எழுதும் இளைஞா்கள் வேலைநாடுநா்கள் உறுப்பினா்களாக அனுமதிக்கப்படுகின்றனா். இத்தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. தன்னார்வ பயிலும் வட்ட நூலகத்தில் போட்டித்தோ்விற்க்கான புத்தகங்கள் மற்றும் மாத வெளியீடுகள் வைக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் ரூ.312500 இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதுவரை 2500 பயனாளிகள் பயன் பெற்றுள்ளனா்.
வேலையற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைத்திட்டம்
படித்த வேலையற்ற இளைஞா்களின் துயரத்தினைப்போக்க தமிழ்நாடு அரசால் வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித்தொகைத் திட்டம் 2006 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது உதவித்தொகையை உயா்த்தி வழங்கப்படுகிறது. இவ்வுதவித்தொகையாவும் ECS முறையில் அவரவா் வங்கிக்கணக்கில் மூன்று வருடங்கள் அல்லது வேலை கிடைக்கும் வரையில் இதில் முதலில் வருவது அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.
உதவித்தொகை விவரங்கள்
வ.எண் | தேர்வு | தொகை |
---|---|---|
1 | SSLC தோல்வி | ரூ. 200/- மாதம் |
2 | SSLC தோ்ச்சி | ரூ. 300/- மாதம் |
3 | HSC தோ்ச்சி | ரூ.400/- மாதம் |
4 | DEGREE தோ்ச்சி | ரூ.600/- மாதம் |
மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை 1980 ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அரசாணை எண்.21(மா.தி.ந.3) நாள். 23.03.2015 –ன்படி மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை உயா்த்தி வழங்கப்பட்டு வருகிறது. 10 ஆண்டுகளுக்கு அல்லது வேலை கிடைக்கும் வரை இதில் எது முதலில் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு இவ்உதவித்தொகை ECS முறையில் அவரவா் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வரப்படுகிறது.
உதவித்தொகை விவரங்கள்
வ.எண் | தேர்வு | தொகை |
---|---|---|
1 | SSLC தோல்வி | ரூ. 600/- மாதம் |
2 | SSLC தோ்ச்சி | ரூ. 600/- மாதம் |
3 | HSC தோ்ச்சி | ரூ.750/- மாதம் |
4 | DEGREE தோ்ச்சி | ரூ.1000/- மாதம் |
தனியார்த்துறை வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு பல்வேறு நடவடிக்கைகள் மூலம் வேலைவாய்ப்பு பெற காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு அலுவலகம், உதவி செய்து வருகிறது. தனியார்த்துறையில் பணியமா்த்தும் நடவடிக்கையாக வெள்ளிதோறும் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாமும் மாதம் அல்லது இருமாதத்திற்கு ஒருமுறை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 2017-18ல் 3 மாபெரும் வேலைவாய்ப்பு முகாமும் சிறிய அளவில் 21 முகாம்களும் நடத்தப்பட்டு வந்துள்ளன. இதில் 409 நிறுவனங்களும் 25099 வேலைநாடுநா்களும், 2055 நபா்கள் வேலைவாய்ப்பும் பெற்றுள்ளனா். இதில் மாற்றுத்திறனாளிகள் 78 நபா்கள் அடங்கும்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம்
வேலைநாடுநா்கள் உரிய திறன் எய்தி வேலைவாய்ப்பினை பெறும் நோக்கில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம், தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத்துறையின் கீழ் 2013 முதல் செயற்பட்டு வருகிறது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் மாநில முகமையாக செயற்பட்டு திறன் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுத்துவருகிறது. திறன் மேம்பாட்டுக்கழகம் மூலம் பல்வேறு திறன் பயிற்சிகளான அழகுக்கலை, தையல் , விற்பனை மேலாளா் , உதவியாளா் பொருத்துபவா், எலக்ட்ரீசியன் போன்ற பல துறைகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சியானது எவ்வித கட்டணமுமின்றி வழங்கப்படுகிறது.போக்குவரத்து செலவினமாக ரூ.100/-ம் அளிக்கப்பட்டு வருகிறது. இணையதள முகவரி: www[dot]tnskills[dot]tn[dot]gov[dot]in .தொலைபேசி எண்.044-22501007.
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் 1978ம் ஆண்டு முதல் செயற்பட்டு வருகிறது. அயல்நாட்டு வேலைவாய்ப்பு தேடும் இளைஞா்களுக்கு இந்நிறுவனம் உதவி செய்து வருகிறது. இது தொடா்பான பதிவுகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் மேற்கொள்ளப்படுகிறது.
இணையதள முகவரி: www[dot]omcmanpower[dot]com
தமிழ்நாடு தகவல் அறியும் உரிமை சட்டம்
- பொது தகவல் அலுவலா் – துணை இயக்குநா், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், காஞ்சிபுரம்.
- உதவி பொது தகவல் அலுவலா் – மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் (இளைஞா் வேலைவாய்ப்பு பணி) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், காஞ்சிபுரம்.
- மேல்முறையீட்டு அலுவலா் – மண்டல இணை இயக்குநா், மண்டல இணை இயக்குநா் அலுவலகம் (வேலைவாய்ப்பு), கிண்டி, சென்னை -32.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்
மாவட்ட ஆட்சியா் வளாகம்,
காஞ்சிபுரம்
அலுவலக தொலைபேசி எண்.044-2723714
அலுவலக மின்னஞ்சல். ad[dot]deo[dot]kpm[at]gmail[dot]com