மூடு

திட்டங்கள்

Filter Scheme category wise

வடிகட்டி

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் – மகளிர் திட்டம்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் 2012 – 13 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசினால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  ஊரக ஏழை மக்களுக்காக வலுவான மற்றும் துடிப்பான சமுதாயம் சார்ந்த அமைப்புகளை உருவாக்கி, வாழ்வாதாரத்தை உயர்த்தி, நிதி மற்றும் பல்வேறு சேவைகளை முறையாகப் பெற வழிவகை செய்து, குடும்ப வருமானத்தை பெருக்குவதே இவ்வியக்கத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ் சமுதாயத்தில் உள்ள ஏழைகள், மிகவும் ஏழைகள், நலிவுற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 1.ஊரகப் பகுதியில் ஏழை மக்களின் வளர்ச்சிக்காக சமுதாயம் சார்ந்த அமைப்புகளை உருவாக்கி வலுப்படுத்துதல் 2.விடுபட்ட ஏழை மக்களை கண்டறிந்து அவர்களை சுய உதவிக் குழுவில் ஒருங்கிணைத்தல். 3.ஊராட்சி…

வெளியிடப்பட்ட தேதி: 12/08/2021
விவரங்களை பார்க்க

தமிழ்நாடு மாநில நகர்புற வாழ்வாதார இயக்கம் /மகளிர் திட்டம்

தமிழ்நாடு மாநில நகர்புற வாழ்வாதார இயக்கம் 2016 – 17 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசினால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.நகர்புற ஏழை மக்களுக்காக வலுவான சமுதாயம் சார்ந்த அமைப்புகளை உருவாக்கி, நிதி மற்றும் பல்வேறு சேவைகளை முறையாகப் பெற வழிவகை செய்து  வாழ்வாதாரத்தை உயர்த்தி குடும்ப வருமானத்தை பெருக்குவதே இவ்வியக்கத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ் சமுதாயத்தில் உள்ள ஏழைகள், மிகவும் ஏழைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றோரே இலக்கு மக்கள் ஆவர். திட்டத்தின் பெயர் திட்டம் பற்றிய விளக்கம் தகுதி நிலை (நன்மை / சேவையைப் பெறக்கூடியவர்கள்) நன்மை/சேவையைப் பெறுவதற்கான நடைமுறை புதிய சுய உதவிக்குழுக்கள் அமைத்தல் குழு உறுப்பினர்களிடையே…

வெளியிடப்பட்ட தேதி: 12/08/2021
விவரங்களை பார்க்க

தாட்கோ-காஞ்சிபுரம்-திட்டம் ( ST )

காஞ்சிபுரம் மாவட்டம் அனைத்து துறைகளிலும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் (ஊரக / நகர்புற ஏழைகளுக்கு உதவிட) துறையின் பெயர் தாட்கோ (தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்) மாவட்ட தலைமை அலுவலர் பெயர் மற்றும் கைப்பேசி எண். திருமதி.ச.மணிமேகலை, எம்.காம், மாவட்ட மேலாளர் 9445029462 வ. எண். திட்டத்தின் பெயர் தகுதி கடன் / மான்யம் / உதவிகள் குறிப்பு 1 2 3 4 5 1 நிலம் மேம்பாட்டு திட்டம் விண்ணப்பதாரர் ஒரு பழங்குடியினராக  இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 -65 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.  திறந்தவெளி கிணறு தோண்டுதல், ஆழ்துளை அமைத்தல்…

வெளியிடப்பட்ட தேதி: 06/08/2021
விவரங்களை பார்க்க

தாட்கோ-காஞ்சிபுரம்-திட்டம் ( SC )

  காஞ்சிபுரம் மாவட்டம் அனைத்து துறைகளிலும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் (ஊரக / நகர்புற ஏழைகளுக்கு உதவிட) துறையின் பெயர்: தாட்கோ (தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்) மாவட்ட தலைமை அலுவலர் பெயர் மற்றும் கைப்பேசி எண். திருமதி.ச.மணிமேகலை, எம்.காம், மாவட்ட மேலாளர் 9445029462 வ. எண். திட்டத்தின் பெயர் தகுதி கடன் / மான்யம் / உதவிகள் குறிப்பு 1 2 3 4 5 1 நிலம் வாங்கும் திட்டம் விண்ணப்பதாரர் ஒரு ஆதிதிராவிட பெண்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 -65 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் ஆண்டு குடும்ப…

வெளியிடப்பட்ட தேதி: 06/08/2021
விவரங்களை பார்க்க

அம்மா உடற்பயிற்சி கூடம்

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 111 ன்படி ஊரகப் பகுதியிலுள்ள மக்களின் நலனுக்காக உடற்பயிற்சி கூடங்கள், பூங்காக்கள், விளையாட்டு மன்றங்கள் மற்றும் கலாச்சார மையங்கள் போன்ற தேவையான வசதிகளை வழங்குதல் கிராம ஊராட்சியின் விருப்பக் கடமைகளில் ஒன்றாகும். அதனடிப்படையில், 2016-17 ஆம் நிதியாண்டில் ஊரக இளைஞர்களின் உடல் ஆரோக்கியத்தையும் மன வளத்தையும் மேம்படுத்த அம்மா உடற்பயிற்சி கூடம் ஒன்றுக்கு ரூ.10 இலட்சம் வீதம் ரூ.50 கோடி மதிப்பீட்டில், 1,161 சதுர அடி பரப்பளவில் 500 அம்மா உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கும் பணிகள் எடுக்கப்பட்டுள்ளன. அம்மா உடற்பயிற்சி கூடத்தின் நன்மைகள் ஊரக பகுதி இளைஞர்கள் உடற்பயிற்சி செய்யவும், தங்களது…

வெளியிடப்பட்ட தேதி: 29/06/2018
விவரங்களை பார்க்க

அம்மா பூங்கா

ஊரகப் பகுதிகளிலுள்ள மக்களின் நலனுக்காக விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள், விளையாட்டு மன்றங்கள் மற்றும் கலாச்சார மையங்கள் ஆகியவற்றை அமைத்தல் கிராம ஊராட்சியின் விருப்பக் கடமைகளில் ஒன்றாகும். அதனடிப்படையில், 2016-17 ஆம் நிதியாண்டில் நகர பகுதிகளுக்கு இணையாக ஊரக பகுதிகளில் கேளிக்கை உட்கட்டமைப்பு வசதிகளுடன் ரூ.100 கோடி மதிப்பீட்டில் பூங்கா ஒன்றுக்கு ரூ.20 இலட்சம் வீதம் 500 அம்மா பூங்காக்கள் அமைக்கும் பணிகள் எடுக்கப்பட்டுள்ளன. அம்மா பூங்காக்கள் தெரிவு செய்தல் மற்றும் அதன் திட்ட கூறுகள் அம்மா பூங்காக்கள், ஆண்டு வருமானம் ரூ.20 இலட்சத்திற்கு மேலாகவும் மற்றும் 14வது நிதிக்குழு மானியத்தின் மூலம் ரூ.20 இலட்சத்திற்கு மேலாக வருமானம் பெறக்கூடியதாகவும்…

வெளியிடப்பட்ட தேதி: 29/06/2018
விவரங்களை பார்க்க

திருமண உதவி திட்டம்

தகுதி : திருமணத்திற்கு 45 நாட்களுக்கு முன் திருமணமாகாத பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

வெளியிடப்பட்ட தேதி: 28/06/2018
விவரங்களை பார்க்க